Share on Social Media

தளபதி 65 அப்டேட்ஸ்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் (Actor Vijay), தற்போது தளபதி 65 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும், இந்த படத்தில், இப்போது, மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல மலையாள நடிகை அபர்ணா தாஸும் படத்தில் நடிக்கிறார்.

தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றி வருகிறார். பூஜா ஹெக்டே (Pooja Hedge) முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

ALSO READ |  சென்னையை விட்டு கிளம்பிய விஜய், மீண்டும் ரசிகர்களுக்கு தரிசனம்: வைரல் புகைப்படம்

மாஸ்டர் படத்திற்கு பிறகு, நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கும் படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக நயன்தாரா நடித்த “‘கோலாமா கோகிலா” படத்டை நெல்சன் திலீப்குமார் இயக்கினார். இந்த படம் மூலம் அவர் இயக்குனாராக அறிமுகமானர். அதன்பிறகு சிவகார்த்திகேயன் நடித்துள்ள “டாக்டர்” படத்தையும் இயக்கியுள்ளார். இந்தபடம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

 

திரையுலகில் சுமார் ஒன்பது ஆண்டு காலம் நடிகர் கமலிடம் உதவி இயக்குநராக ஷைன் டாம் சாக்கோ (Shine Tom Chacko) பணியாற்றி உள்ளார். அவர் “காடம்மா” திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இந்த படத்தில் துணை வேடத்தில் நடித்தார். பின்னர் அவர் சால்ட் என் பெப்பர், “ஈ அடுத்த காலத்து” ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். 

ALSO READ |  தளபதி 65 அதிரடி அப்டேட்: படப்பிடிப்பு துவங்கியது, பூஜையில் பூஜா கலந்துகொள்ளாதது ஏன்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடர முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *