Share on Social Media


விஜய்யின் தளபதி 65 படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸாகக்கூடும் என்று கூறப்படுகிறது.

தளபதி 65

மாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார் விஜய். சென்னையில் பூஜையை போட்டுவிட்டு தமிழக சட்டசபை தேர்தல் முடிந்த மறுநாளே படக்குழு ஜார்ஜியாவுக்கு பறந்தது. முதல்கட்ட படப்பிடிப்பை நல்லபடியாக நடத்திவிட்டு நாடு திரும்பினார்கள். அடுத்தகட்ட படப்பிடிப்பை மே மாதம் சென்னையில் நடத்த திட்டமிட்டார்கள். ஆனால் கொரோனாவின் இரண்டாம் அலையால் படப்பிடிப்பை திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை.

ரிலீஸ்

samayam tamil Tamil News Spot

தளபதி 65 படத்தை 2022ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். ரஜினியின் அண்ணாத்த படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தளபதி 65 படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறது. அண்ணாத்த படத்தை தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக நவம்பர் மாதம் 4ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்.

பூஜா ஹெக்டே

samayam tamil Tamil News Spot

தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பிரபல மலையாள நடிகை அபர்ணா தாஸும் இருக்கிறார். மாஸ்டரை அடுத்து தளபதி 65 படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார். நெல்சன் திலீப்குமாரை விஜய்க்கு பரிந்துரை செய்ததே அனிருத் தான் என்று கூறப்படுகிறது. முன்னதாக தளபதி 65 படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாப்பிங் மால்

samayam tamil Tamil News Spot

தளபதி 65 படத்திற்காக சென்னையில் ஷாப்பிங் மால் செட் அமைக்கும் பணி நடந்து வந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இந்த நேரத்தில் செட் அமைக்கும் பணியில் ஆட்களை ஈடுபடுத்துவது பாதுகாப்பு இல்லை, அதனால் உடனே அந்த வேலையை நிறுத்தச் சொல்லுங்கள் என்றாராம் விஜய். இதையடுத்து செட் அமைக்கும் பணியை நிறுத்தி வைத்துள்ளனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *