Share on Social Media


டீன் ஏஜ் வயதினர் பெரும்பாலும் சுவையான உணவுகளை நாடுவதுண்டு. பெரும்பாலும் வறுத்த உணவுகள், சோடாக்கள் போன்றவற்றுக்கு அடிமையாகி இருப்பவர்கள் அதிகம் உண்டு.

உலக சுகாதார அமைப்பின் படி பதின்மவயதினரில் 10 பேரில் ஒருவர் மோசமான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக அதிக எடை அல்லது உடல் பருமனை கொண்டிருக்கிறார்கள்.

இது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் மூட்டு பிரச்சனைகள் அபாயத்தை அதிகரிக்கும். பெரும்பாலும் டீன் ஏஜ் உடல் பருமன் வயது வந்த பிறகும் அவர்களது வாழ்க்கையை பாதிக்கிறது. பதின்ம வயதினர் எடையை கட்டுக்குள் வைக்கவும். ஆரோக்கியமான எடையை கொண்டிருக்கவும் செய்ய வேண்டிய குறிப்புகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

​சோடாவை தவிருங்கள்

சோடாக்களில் தினசரி எடுத்துகொள்ள வேண்டிய அளவை விட அதிக சர்க்கரை உள்ளது. இது உடல் பருமன், நீரிழிவு நோயை உண்டாக்குகிறது.

உங்களுக்கு சோடா பிடித்தால் செயற்கையை தவிர்த்து இயற்கையாக வீட்டில் எலுமிச்சை, ஐஸ்கட்டி, பெர்ரி சாறு, புதினா கலந்து தயாரித்து பயன்படுத்துங்கள்.

​ஜங்க் ஃபுட் உணவை தவிருங்கள்

samayam tamil Tamil News Spot

ஜங்க் ஃபுட் என்னும் குப்பை உணவுகள் டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் கொண்டுள்ளன. மேலும் கலோரிகள், உப்பு மற்றும் சர்க்கரை அதிகம் உள்ளன. இது உடலில் கொழுப்பை அதிகரிக்க செய்யலாம். இந்த கொழுப்பை கரைய செய்வது அதிக சிரமமாக இருக்கும். அதனால் உடல் எடையை குறைக்க விரும்பினால் ஜங்க் ஃபுட் உணவை தவிர்ப்பது முக்கியம்.

ஆரோக்கியமான வாழ்க்கை வாழணுமா, இதை ஃபாலோ பண்ணுங்க!

ஆரோக்கியமான உணவுக்கு வேகவைத்த காய்கறிகள், பழச்சாறுகள், கேரட், வெள்ளரி, கொட்டைகள், வெற்று பாப்கார்ன் போன்றவற்றை எடுத்து கொள்ளுங்கள். குளிர்பானத்துக்கு மாற்றாக டிடாக்ஸ் நீர், ஐஸ் டீ, பழச்சாறுகள் புதிதாக தயாரிக்கப்பட்டதை எடுத்துகொள்ளுங்கள். இனிப்புகளுக்கு மாற்றாக பழங்களை எடுத்துகொள்ளுங்கள். குறைந்த கொழுப்புடன் உறைந்த தயிர் சேர்க்கலாம்.

​நார்ச்சத்து மற்றும் புரதத்தை சேருங்கள்

samayam tamil Tamil News Spot

அதிக நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகள் திருப்தியை அளிக்கின்றன. பசியில்லாமல் வைத்திருக்க செய்கின்றன.

நார்ச்சத்து நல்ல குடல் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது. மேலும் செரிமானத்தை ஊக்குவிக்கிறது. எடை குறைப்பு கட்டத்தில் புரதமானது மெலிந்த தசை இழப்பை தடுக்கிறது.

காய்கறிகளில் கீரைகள், கேரட், அஸ்பாகரஸ், கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, கீரைகள், முட்டை கோஸ், பட்டாணி, கொத்துமல்லி.

பழங்களில் ஆப்பிள் வாழைப்பழம், அன்னாசிப்பழம், பீச், பேரிக்காய், ஆரஞ்சு, ப்ளம், பெர்ரி பழங்கள். தர்பூசணி மற்றும் முலாம் பழம்.

புரதம் – முட்டை, மீன், டோஃபு, காளான், பயறு வகைகள், சிறுநீரக பீன்ஸ், சோயா பீன்ஸ், கருப்பு பீன்ஸ், பட்டாணி போன்றவற்றை சேர்க்க வேண்டும்.

​நல்ல கொழுப்புகளை எடுத்துகொள்ளுங்கள்

samayam tamil Tamil News Spot

எல்லா கொழுப்பு உணவுகளும் மோசமானவை அல்ல. கொழுப்பு நிறைந்த மீன், கொட்டைகள் மற்றும் விதைகளில் காணப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் எடை இழப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு சிறந்தவை.அரிசி தவிடு எண்ணெயில் உள்ள ஓரிசனோல் கெட்ட கொழுப்பை குறைக்க செய்கிறது. நீங்கள் சேர்க்க வேண்டிய கொழுப்புகள்.

அவகேடோ, அவகேடோ எண்ணேய், ஆலிவ் எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், நெய், பாதாம், வால்நட், கொட்டைகள், கொழுப்பு மீன், ஆளிவிதைகள், முலாம்பழ, சியா விதைகள், சூரிய காந்தி விதைகள், வேர்கடைஅல் எண்ணெய், ஆளி விதை வெண்ணெய் போன்றவற்றை சேர்க்க வேண்டும்.

அதே போன்று காய்கறி எண்ணெய், வெண்ணெய், பன்றிக்கொழுப்பு, சீஸ், கோழி தோல் பன்றி இறைச்சி, கொழுப்பு மற்றும் வெண்ணெய் தவிர்க்க வேண்டும்.

​சுறுசுறுப்பாக இருங்கள்

samayam tamil Tamil News Spot

உங்கள் வயதுக்கேற்றபடி சுறுசுறுப்பாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.எந்த நேரமும் உடலுக்கும் மனதுக்கும் அசைவு கொடுத்தபடி இருங்கள். இளம் வயதினருக்கே உரிய ஜிம், உடற்பயிற்சி, நணபர்களோடு ஜாகிங் செல்வது. ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, ஸ்கேட்டிங் போவது என எப்போதும் உங்களை ஓய்வில்லாமல் வைத்திருங்கள். தினசரி உடல் பயிற்சி அவசியம் என்பதை மறந்துவிட வேண்டாம்.

மாதவிடாய் நாள் வலியை குறைக்கும் ஆயுர்வேத தேநீர், தயாரிப்பும் பயன்களும்! உடனே ட்ரை பண்ணுங்க!

யோகா செய்வதன் மூலம் உடல் மனம் ஆன்மா மூன்றும் சிறந்த நிலையை பெறுகிறது உடலில் அதிக சக்தியை செலுத்துகிறது உங்கள் வளர்சிதை மாற்றத்தை சீராக்க செய்கிறது.

​உடலை நீரேற்றமாக வைத்திருங்கள்

samayam tamil Tamil News Spot

நீரிழப்பு உடலில் நச்சு சேர்வதை ஊக்குவிக்கிறது. இது உடல் பருமனுக்கு தூண்டுதலை உண்டாக்கும். நச்சுக்களை வெளியேற்றவும், எடை இழப்பை ஆதரிக்கவும் குறைந்தபட்சம் தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.

தண்ணீர் போன்று பழச்சாறுகள் சர்க்கரை இல்லாமல் சேர்க்கலாம் சூப் , காய்கறிகள், ஸ்மூத்தியாகவும் எடுக்கலாம்.

​.காலை உணவு தவிர்க்காதீர்கள்

samayam tamil Tamil News Spot

காலை உணவு மிக முக்கியமானது ஒவ்வொரு நாளும் அதை தவிர்ப்பதற்கு நீங்கள் பழகினால் இது எடை அதிகரிப்பதை ஊக்குவிக்கும்.காலையில் எழுந்த பிறகு 2மணி நேரத்துக்குள் காலை உணவை எடுத்துகொள்ளுங்கள். காலையில் புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கார்ப்ஸ் அனைத்தும் சமநிலையில் இருக்க வேண்டும்.

இது வளர்சிதை மாற்றம் சீராக இருக்க உதவுகிறது. உடல் எடை குறைவதையும் ஊக்குவிக்கிறது. ஆரோக்கியமான காலை உணவு நாள் முழுவதும் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். பசி உணர்வை கட்டுப்படுத்தும்.

​அதிக கலோரிகள் உடல் எடை குறைக்குமா

samayam tamil Tamil News Spot

அதிக கலோரிகளை உட்கொள்வது உடல் எடையை குறைக்க செய்யாது. டீன் ஏஜ் வயதினர் நாள் ஒன்றுக்கு 1400 முதல் 2400 கலோரிகள் தேவை. சிறுவர்களுக்கு 1600- 3000 கலோரிகள் தேவை. இது செயல்பாட்டு அளவை பொறுத்தது.

சாப்பிடும் போது சிறிய தட்டில் வைத்து சாப்பிடுவதால் உணவு நிரம்பியதை பெறுவீர்கள். உங்கள் தட்டில் பாதி காய்கறிகள், பழங்கள் இருக்க வேண்டும். நான்கில் ஒரு பங்கு புரதம் இருக்க வேண்டும். முழு தானியங்களும் இடம்பெற்றிருக்க வேண்டும்.

​நன்றாக தூங்குங்கள்

samayam tamil Tamil News Spot

தூக்கமின்மை எடை இழப்பை எதிர்க்கலாம். மாறாக எடை அதிகரிப்பை தூண்டும். நாள் முழுக்க சோம்பலை உணரலாம். அன்றாட பயிற்சிகள் மற்றும் பிற செயல்பாடுகளை தடுக்க கூடும்.

டீன் ஏஜ் பெண்கள் மாதவிடாய் நாளில் மென்சுரல் கப் பயன்படுத்தலாமா? பாதிப்பு உண்டாகுமா?

தூங்கும் நேரத்தில் வேறு விஷயத்தில் மனத்தை திசை திருப்புவது, கண்களுக்கு அதிக ஒளி தரும் விஷயங்களில் மனதை செலுத்துவது தூக்கமின்மையை உண்டாக்கும். மன அழுத்தமும் ஒரு வகையில் உடல் எடையை அதிகரிக்க செய்யும். அதனால் எப்போதும் மன அழுத்தம் இல்லாமல் இருங்கள்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *