Share on Social Media


எனது பதில் வள்ளுவம் தான்..

அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து.

நம் சாப்பிடும் உணவு நமது உடலுக்கு உற்றதா?? அற்றதா?? என்பதை அடுத்த வேளை பசி சொல்லி விடும்.

3 அன்னக் கரண்டி சிவப்பரிசி சோறும், விறால் மீன் குழம்பும் மதியம் ஒரு மணிக்கு சாப்பிட்டாலும் மாலை 4 மணிக்கு வயிறு காலியாக உணரப்படுகிறது எனின் நீங்க சாப்பிட்டது உற்றது.. மாறாக பாரம்பரிய சைவ உணவகத்தில் அளவு சாப்பாடு சாப்பிட்டாலும் மாலை வயிறு மந்தமாகத்தான் இருக்கிறது. அப்படி எனின் நீங்க சாப்பிட்டது அற்றது…

அசைவம் சாப்பிட்டால், எண்ணெய் அதிகம் சேர்த்தால் கொலஸ்ட்ரால் கூடி விடும் என்ற தவறான கருத்தை எந்த மீடியாவாலும் மக்கள் மனதில் இருந்து அகற்ற முடியவில்லை.

நமது பாரம்பரிய உணவு முறையில்..

60% மாவுச்சத்து (கார்போஹைடிரேட்)

30% புரதம் (ப்ரோட்டின்)

10% கொழுப்பு (கொலஸ்ட்ரால்)

60:30:10 என்ற விகிதங்கள் (இருக்கின்றன) இருந்தன.

2 கப் அரிசி + 1 கப் உளுந்து = இட்லி (கூட தேங்காய் சட்னி)

கூட்டி கழித்து பாருங்க…

நவீன மருத்துவ அறிவியல் கார்போஹைட்ரெட் என்ற மாவுச் சத்தை குறைக்க/தவிர்க்க வலியுறுத்துகிறது. கீட்டோ (Keto), பேலியோ (Paleo) போன்ற உணவு முறைகள் வெறும் புரதத்தை அடிப்படையாக கொண்டவை. புரதமும் நார்ச்சத்தும் சரியான அளவில் உணவாக்கினால் நீரிழிவு, கொலஸ்ட்ரால் போன்ற பல நோய்களில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.

idly

idly
Photo by sarthak from Pexels

புரத உணவுகளுக்கு அசைவமே சிறந்தது. தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளில் உள்ள புரதம் முழுமை அடையாத புரதம் (Incomplete Protien). உடலுக்கு தேவையான அத்தியாவசிய அமினோ அமிலங்கள் சில சைவ புரதங்களில் இல்லை. லைசின்(Lysine) இல்லாத அரிசியை சோறாக்கி, மெத்தியோனின் (methionine) இல்லாத பருப்பை சாம்பாராக்கி கலந்த தென்னிந்திய பாரம்பரிய உணவு வியப்பூட்டும் முழுமையான புரதம். (ஆனால் புரதம் வெறும் 30% மட்டுமே)

அசைவ புரதங்களில் சில சிக்கல்கள்:

> எண்ணெயில் பொறித்தால்.. அதீத சூட்டில் புரதம் திரிந்து விடும். (உடலுக்கு கேடு)

> சரியான அளவில் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் சிறுநீரக பாதிப்புகள் ஏற்படலாம்.(புரதம் மட்டும் சாப்பிடும்பட்சத்தில்)

>நார்ச்சத்து அறவே இல்லாத அசைவ உணவுகளில்… நார்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளையம் சேர்த்து கொள்வது நல்லது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.