Share on Social Media


சென்னை: லாக்டௌன் தொடங்கியதிலிருந்து மூடப்பட்டிருந்த தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகத்தால் (TASMAC) இயக்கப்படும் அனைத்து மதுக்கடைகளின் பார்களும் இன்று முதல் மீண்டும் தொடங்கும் என்று தமிழ்நாடு அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

தமிழக அரசின் உத்தியோகபூர்வ உத்தரவில், ஸ்டாண்டர்ட் ஆப்பரேட்டிங் செய்முறையை (SOP) பின்பற்றி, கட்டுப்பாட்டு மண்டலங்களைத் தவிர மற்ற இடங்களில் மதுபான கடைகள் பார்களைத் திறக்க TASMAC அனுமதித்தது.

இது தொடர்பாக கொடுக்கப்பட்ட ஒரு சுற்றறிக்கையில், பின்பற்றப்பட வேண்டிய SOP ஐப் பற்றி அரசு விவரித்துள்ளது.

“தனிநபர்கள் முகக்கவசங்களை கண்டிப்பாக அணிய வேண்டும். முடிந்தவரை குறைந்தபட்சம் ஆறு அடி தனி மனித இடைவெளியை அனைவரும் பராமரிக்க வேண்டும். இருமல் அல்லது தும்மும்போது டிஷ்யு அல்லது கைக்குட்டையால் வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். இந்த விதி உட்பட பல கடுமையான நடைமுறைகளை உள்ளடக்கிய விதிமுறைகளும் அளிக்கப்பட்டுள்ளன. பாருக்குள் துப்புவதும் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.” என்று SOP-யில் கூறப்பட்டுள்ளது.

மற்ற வழிகாட்டுதல்களில் பாரின் மொத்த கொள்ளளவில், 50 சதவீதத்திற்கு மேல் நபர்களை அனுமதிக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. பாருக்கு வருவோர் பயன்படுத்தும் வகையில், பாரின் நுழைவாயிலில் கைகளை சுத்திகரிக்க ஹேண்ட் சானிடைசர்கள் வைக்கப்பட வேண்டும். பாருக்கு வரும் அனைவருக்கும் ஒவ்வொரு முறையும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

ALSO READ: முகக்கவசமே உங்கள் கவசமாக இருக்கும், அதை மறக்க வேண்டாம்: தமிழக முதல்வர் EPS

இதற்கிடையில், முகக்கவசங்கள் பயன்படுத்துவதன் அவசியத்தை நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி (Edappadi K Palaniswami) அவர்கள் மீண்டும் வலியுறுத்தினார்.

தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதால், சிலர் இன்னும் தொற்றுநோயை லேசாக எடுத்துக்கொண்டு, முகக்கவசம் அணிவதைத் தவிர்த்து வருகிறார்கள் என்ற கவலையை வெளிப்படுத்திய முதல்வர், முன்னெச்சரிக்கைகள் குறித்த அரசாங்க வழிகாட்டுதல்களை கண்டிப்பாக அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, சில மாவட்டங்களைத் தவிர, கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று பல மாவட்டங்களில் மிகக் குறைவாகியுள்ளது என்று அவர் கூறினார்.

“நான் தமிழகம் (Tamil Nadu) முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். மாவட்டத் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளேன. மேலும் கவனம் செலுத்தும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தினேன்.” என்றார் EPS. லாக்டௌன் விதிமுறைகளை படிப்படியாக தளர்த்துவதால், பல இடங்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதைக் காண முடிகிறது” என்றார் அவர்.

புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளில் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

ALSO READ: அ.தி.மு.க. என்றால் அண்ணா தி.மு.க. அல்ல அடிமை தி.மு.க. மோடி: உதயநிதி ஸ்டாலின்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *