Share on Social Media


வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில் அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அக்டோபர் 10-ம் தேதியே உருவாகும் என கூறப்பட்ட நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி தாமதமாக உருவாகியுள்ளது என்றும் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திரா-ஒடிஷா நோக்கி செல்லும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் 3 நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகாவில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *