Share on Social Media


தமிழ் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ் ஆகும்.  தமிழ் பிக்பாஸ் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் 5வது சீசன் தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை வென்றுள்ளனர். 

பிக்பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடத்தப்படும். ஆனால் கடந்தாண்டு கொரோனா (Corona Spread) பரவல் காரணமாக பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் தொடங்கி இந்தாண்டு ஜனவரி 16 ஆம் தேதி வரை நடைபெற்றது.

ALSO READ | Vikram Movie Update: விக்ரம் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்

இந்நிலையில் பிக்பாஸ் தமிழ் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜூன் மாதமே சீசன் 5 தொடங்க திட்டமிட்டு இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் அதிகமாக இருந்ததால் ஒத்திவைக்கப்பட்டது. 

தற்போது படிப்படியாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து மீண்டும் பிக்பாஸ் குழுவினர் நிகழ்ச்சியை நடத்தும் ஏற்பாட்டை தொடங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்தாண்டை போலவே இந்தாண்டும் அக்டோபர் மாதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடங்க அதன் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வழக்கம்போல் இந்த சீசனையும் கமல்ஹாசன் (Kamal Haasan) தான் தொகுத்து வழங்க உள்ளாராம். மேலும் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ | Lyca Productions: இயக்குநர் ஷங்கர் திரைப்படங்களை இயக்க தடை விதிக்க வேண்டும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *