Share on Social Media

இந்த கோவிட் தாக்குதலால் கடந்த இரண்டு வருடமாக நமது வாழ்க்கை பெரும் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. பல உயிரிழப்புகள், வேலை இழப்புகள், பொருளாதார சிக்கல்கள், மன சிக்கல்கள்,வாழ்க்கை முறை மாற்றம், உடல் எடை கூடுதல், நோய்கள் அதிகரிப்பு என கடந்த இரு வருடங்களாக மனித சமூகம் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டு வருகிறது. அதில் கூடுதலாக இப்பொழுது வந்திருக்கும் பிரச்சனைதான் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் உடலுறவில் தடுமாறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

​உடலுறவு பிரச்சினைகள்

இந்திய குடும்ப அமைப்பை பொறுத்தவரை உடலுறவு என்பது பேசுபொருளாக இருப்பதில்லை. அதனைப் பற்றிய தெளிவான கலந்துரையாடல்கள் இல்லாத காரணத்தினால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, உடலுறவு சார்ந்த நோய்கள் பற்றிய விழிப்புணர்வுகள் இல்லை. மேலும், அதற்கு சரியான மருத்துவ வழிகாட்டி இல்லாமல் ஆன்லைனில் கிடைக்கும் எந்த நிரூபிக்கப்படாத விஷயங்களையும் மருந்தாக எடுத்துக் கொள்வதன் மூலம் பெரும் பாதிப்பினை அடைவதாக மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும், மருத்துவ ஆலோசனை இல்லாமல் தெரிந்த நண்பர்களிடம் கேட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது ஆபத்தானதாக முடிகிறது.

​கோவிடும் உடலுறவு பிரச்சனைகளும்

samayam tamil Tamil News Spot

ஆய்வின்படி எந்த அறிவியல் பூர்வமான சோதனைகளும் தீர்வுகளும் கோவிட்டிற்கும் உடலுறவு பிரச்சினைகளுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக தெரியவில்லை, ஆனால், பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்து கோவிட்டால் பாதிக்கப்பட்டு பிறகு செக்ஸின் போது விறைப்புத்தன்மை குறைந்து விடுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. எனவே, உலகம் முழுவதும் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் இரண்டுக்கும் இடையிலான தொடர்பினை பற்றி ஆய்வு மேற்கொள்ள துவங்கினர்.

இந்த கட்டுரையில் எந்த காரணங்களால் விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படுகிறது என்று பார்க்கலாம்.

​ரத்த ஓட்டத்தில் தடங்கல்கள்

samayam tamil Tamil News Spot

கோவிட்டால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் மிக வேகமாக செயல்படுவதால் சில பகுதிகளில் சிறிதான ரத்த ஓட்ட தடைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. அது ரத்த ஓட்டம் செல்வதை தடுப்பதன் விளைவாக விரைப்புத்தன்மை ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன என தெரிவிக்கப்படுகிறது. அதாவது அதிகப்படியான நோயெதிர்ப்பு மண்டலம் வேலை இதற்கு காரணமாக இருக்கலாம்.

​வாஸ்குலார் தாக்கம்

samayam tamil Tamil News Spot

விறைப்புத்தன்மையை பொருத்து இதய நோயைப் கணிக்க முடியும். எனவே நாம் ஏற்கனவே அறிந்தது போல இனப்பெருக்க மண்டலத்திற்கும் இதய மண்டலத்திற்கும் இடையே அதிக தொடர்புகள் இருக்கின்றன. நாம் ஏற்கனவே அறிந்தது போல கோவிட்டானது உடல் முழுவதும் அதிக உயர் அலர்ஜியை ஏற்படுத்துகிறது. அது இதயத்தினையும் அதை சுற்றி இருக்கக்கூடிய தசைகளையும் விட்டுவைப்பதில்லை. எனவே தான், ஆண் குறியை நோக்கி செலுத்தப்படும் ரத்தம் ஓட்டமானது இந்தப் புதிய வாஸ்குலர் தாக்கத்தின் காரணமாக தடைபடுகிறது அல்லது குறைகிறது. இதன் காரணமாக தான் விரைப்புத்தன்மை ஏற்படுவதில் பிரச்சனைகள் எழுதலாம் என கணிக்கப்படுகிறது.

​மன அளவிலான தாக்கங்கள்

samayam tamil Tamil News Spot

நாம் ஏற்கனவே அறிந்தது போல நம்முடைய மன ஆரோக்கியத்திற்கும் உடலுறவு செயல்பாடுகளுக்கும் மிகப்பெரிய பொருத்தம் இருக்கிறது. இந்த வைரஸ் மற்றும் ஊரடங்கு போன்ற பல்வேறு பிரச்சனைகளால் குடும்ப அமைப்பில் மாறுதல்கள், வாழ்க்கை முறையில் மாறுதல்கள், வேலை இழப்புகள், உயிரிழப்புகள் போன்றவை காரணமாக அதிகப்படியான மன அழுத்தங்கள், சோர்வுகள் ஏற்படுகின்றன, இதுவும்கூட நேரடியாக உடலினை பாதிப்பதால் இந்த உடலுறவில் அதிக நாட்டம் ஏற்படாமல் போகிறது, இதன் காரணமாக இயற்கையாகவே விரைப்பு தன்மை பிரச்சனை ஏற்படுகிறது.

எனவே, உடல் ரீதியான மருத்துவ பரிசோதனை மற்றும் மன ஆரோக்கியம் சார்ந்த கவுன்சிலிங் ஆகியவை கட்டாயமாக கொரனா பாதிக்கப்பட்ட பின் குணமானவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது.

​மொத்தமாக உடல் ஆரோக்கிய சீரழிவு

samayam tamil Tamil News Spot

இந்த விரைப்புத்தன்மை பிரச்சனை என்பது ஏதோ ஒரு பெரிய பிரச்சினையின் அறிகுறியாக கூட இருக்கலாம். கோவிட் பாதிக்கப்பட்ட பின், ஆணின் உடலில் ஏற்பட்ட மிகக் கடுமையான ஆரோக்கிய கோளாறு இந்த விரைப்புத்தன்மை பிரச்சனைக்கு காரணமாக இருக்கிறது,

நாம் கோவிட்டினை ஒரு சாதாரண காய்ச்சல் தொற்று என நினைத்து விடுவது தவறான ஒன்றாகும். எனவே, இளமையான ஆண்கள் கோவிட் 19 பாதிப்புக்கு பிறகு இந்த விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்பட்டது என்றால், வேறு ஏதோ முக்கிய முக்கியமான உடல் உபாதைகள் ஏற்பட்டிருக்கிறது என்பது பொருளாகும்.

எனவே, இதனை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக நல்ல மருத்துவர்களை சந்திப்பது அவசியமானது ஆகும். இன்னும் இதனை கவனிக்காமல் விட்டால் இன்னும் சில மாதங்களில் அது பெரும் பிரச்சினையை உருவாக்கி விடக் கூடிய ஆபத்துகள் இருக்கின்றன.

​இதற்கு வீட்டில் மருத்துவம் எடுத்துக் கொள்ளலாமா?

samayam tamil Tamil News Spot

எப்பொழுதும் இயற்கையான மருத்துவங்கள் ஒரு நேர்த்தியான மருத்துவ உதவியினை செய்வதில்லை. அதுவும் இதுபோன்ற உடலுறவு சார்ந்த பிரச்சனைகள் என்பது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது என்பது அவசியமானது ஆகும். இந்த நேரத்தில் இதுபோன்ற வீட்டில் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது பயனளிக்காது மற்றும் பரிந்துரைக்கப்பட கூடியதும் அல்ல.

ஆனால், வீட்டில் சில உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். அதாவது பூசணிக்காய் விதை, ஓட்ஸ், ப்ரவுன் ரைஸ், வேர்க்கடலை போன்றவை விரைப்புத்தன்மை அதிகரிக்கக்கூடிய உணவுகளில் முக்கியமான பங்கு வைக்கக்கூடியது ஆகும். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு ஸ்பூன் இஞ்சி சேர்த்த தேனை ஒரு நாளைக்கு மூன்று முறை என இரண்டு மாதங்கள் எடுத்துக் கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தினமும் நன்றாக உடற்பயிற்சி செய்வது நிறைய நடப்பது, தசைகளுக்கு பலம் சேர்க்க கூடிய உடற்பயிற்சி செய்வது அவசியமான ஒன்றாகும்.

மேலும், உடலில் ரத்த சுழற்சியை அதிகப்படுத்தி அதற்காக முருங்கை பூ, அஸ்வகந்தா, அக்ரூட் பருப்புகள் மற்றும் துளசி விதைகளை சாப்பிடுவதன் மூலம் பயன்பெற முடியும். மேலும் இந்த விரைப்புத்தன்மை சார்ந்த பிரச்சனைகளில் இருந்து தீர்வு பெற முடியும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *