Share on Social Media


சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

சூர்யா

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூர்யாவுக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சூர்யா ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க எதற்கும் துணிந்தவன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

Twitter-Sun Pictures

எதற்கும் துணிந்தவன்

samayam tamil Tamil News Spot

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தை சூர்யா 40 என்று அழைத்து வந்தனர். இந்நிலையில் தான் சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக நேற்று மாலை 6 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக்கை வீடியோவாக வெளியிட்டனர். ஒரு கையில் வாள், ஒரு கையில் துப்பாக்கியுடன் வந்து மிரட்டினார் சூர்யா. படத்திற்கு எதற்கும் துணிந்தவன் என்று தலைப்பு வைத்திருப்பது ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது.

Twitter-Sun Pictures

செகண்ட் லுக்

samayam tamil Tamil News Spot

ஃபர்ஸ்ட் லுக் வீடியோவிலும் சூர்யா சம்பவம் செய்தார். செகண்ட் லுக் போஸ்டரில் பல சம்பவம் செய்து வாளுடன் அமர்ந்திருக்கிறார். படத்தில் ஆக்ஷன் காட்சிகள் தான் அதிகம் இருக்கும் போன்று. இருக்கு தரமான சிறப்பான சம்பவம் இருக்கு என்று சூர்யா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

காத்திருப்பு

samayam tamil Tamil News Spot

எதற்கும் துணிந்தவன் படத்தை பார்க்க ரசிகர்கள் மட்டும் அல்ல திரையுலகினரும் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் எதற்கும் துணிந்தவனின் செகண்ட் லுக் போஸ்டர் விஜய் படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளதாக தளபதி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அதை சூர்யா ரசிகர்கள் மறுத்துள்ளனர்.

Twitter-~R~D~ 𝓣𝓱𝓪𝓵𝓪𝓹𝓪𝓽𝓱𝔂



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *