Share on Social Media

Suriya 40 Firs tLook: நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை (Suriya’s 46th Birthday) ஒட்டி, அவரின்  40வது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. முன்னதாக, இன்று மாலை சூர்யா படத்தின் போஸ்டர் வெளியிடப்படும் என வீடியோ டீஸர் மூலம் சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது. அப்போதிலிருந்தே ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தனர். தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டதால், அதை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 40 படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. 

 

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு (Suriya) ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். இவர் டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இயக்குனர் பாண்டிராஜ் திரைப்படத்தை முடித்தவுடன், அடுத்து வெற்றிமாறன் இயக்கம் “வாடிவாசல்” படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு அதன் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *