Share on Social Media


பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. பாக்சிங்கை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் சார்பட்டா படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகர் சூர்யா.

அட்ட்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை தொடர்ந்து தற்போது சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை இயக்கி உள்ளார் பா.ரஞ்சித். சார்பட்டாவில் பாக்ஸிங் வீரராக ஆர்யா, பசுபதி, அனுபாமா குமார், சஞ்சனா நடராஜன், சந்தோஷ் பிரதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள இந்தப்படம் குறித்து அனைவரும் பாசிட்டிவான கருத்துகளையே கூறி வருகின்றனர்.

வடசென்னையில் எண்பதுகளில் பிரபலமாக இருந்த குத்துச் சண்டை அணிகளைப் பற்றி அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது. சார்பட்டா பரம்பரை, இடியப்ப பரம்பரை என இரண்டு அணிகள் குத்துச் சண்டையில் மோதுவதை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தின் மேக்கிங் அற்புதமாக உள்ளதாக பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாகவும் படக்குழுவினரை வாழ்த்தி வருகின்றனர்.

இளையராஜா குறித்து சர்ச்சை பேச்சு: வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
இந்நிலையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் சார்பட்டா படக்குழுவினரை வாழ்த்தி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘சார்பட்டா பரம்பரை’ இதுவரை சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது. வடசென்னை மக்களின் வாழ்வியலைத் திரை அனுபவமாக மாற்ற இயக்குநரும், நடிகர்களும், ஒட்டுமொத்தப் படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்பட வைக்கிறது! வாழ்த்துகள்!! அற்புதமான பணி” என குறிப்பிட்டுள்ளார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *