Share on Social Media

புது டெல்லி: பாலிவுட் நடிகை சன்னி லியோன் (Sunny Leone) சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். அதேபோல படப்பிடிப்பின் போது மிகவும் ஜாலியாக இருக்கக்கூடியவர். அவரது இன்ஸ்டாகிராம் இடுகைகள் மூலம் அவர் சமூக ஊடகங்களில் எவ்வளவு பிஸியாக இருக்கிறார் என அறிந்துக்கொள்ள்ளலாம். சமீபத்தில், நடிகை சன்னி லியோன் ஒரு வீடியோவைப் (Sunny Leone Video) பகிர்ந்துள்ளார். அதில் அவர் காயமடைந்த நிலையில் லூடோ விளையாடிக்கொண்டு இருக்கிறார். 

முகத்தில் காயம் – லூடோ விளையாடுகிறார்:
சன்னி லியோன் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், சன்னியின் முகத்தில் பல காயங்கள் காணப்படுகின்றன. ஆனாலும் சிரித்தபடி, ஜாலியாக லூடோ விளையாடுகிறார். அந்த வீடியோவில், தோற்றுவிடுவோமோ என்ற கவலையில் அவர் இருப்பது தெரிகிறது. ஆனால் அவர் லூடோ விளையாட்டில் வெற்றி பெற்று விட்டேன் எனப் பதிவிட்டுள்ளார். 

 

“ஷிரோ” படப்பிடிப்பு:
சன்னி லியோனின் முகத்தில் காயம் (Sunny Leone injury) ஏற்படக் காரணம் அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்ட போது ஏற்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது. ஆம், தற்போது அவர், “ஷெரோ” படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். ஒரு உளவியல் த்ரில்லர் படமாக “ஷெரோ” (Shero) உருவாகி வருகிறது. இந்த படத்தில் முதல் முறையாக சன்னி வித்தியாசமான வேடத்தில் நடிக்கப் போகிறார். தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் 4 மொழிகளில் “ஷெரோ” படம் வெளியாக உள்ளது.

ALSO READ | Viral: நீண்ட நாட்களுக்கு பிறகு கவர்ச்சி உடையில் தரிசனம் அளித்த சன்னி லியோன்!

புதிய வீடு வாங்கிய சன்னி லியோன்:
சில மாதங்களுக்கு முன்பு சன்னி லியோன் ஒரு வீட்டை வாங்கியிருந்தார். மனிகண்ட்ரோல்.காமில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, 2021 மார்ச் 28 அன்று சன்னி ஒரு பிளாட் ரூ .16 கோடிக்கு வாங்கியுள்ளார். இந்த சொத்தை சன்னி தனது உண்மையான பெயரின் பேரில் வாங்கியுள்ளார். அதாவது கரண் ஜீத் கவுர் வோஹ்ரா. அதே நேரத்தில், சன்னியின் இந்த வீடு அந்தேரி வெஸ்டில் அட்லாண்டிஸ் என்ற கட்டிடத்தில் 12 வது மாடியில் அமைந்துள்ளது. இந்த 5BHK குடியிருப்பின் தரைவிரிப்பு பகுதி 3,967 சதுர மீட்டர். இந்த குடியிருப்பில் மூன்று கார் பார்க்கிங் இடங்கள் உள்ளன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *