Share on Social Media


கோவை, சேரன்மாநகர் பகுதியில், பிரதீப் சிங் என்ற பெயரில், அவரது காதலி அம்மானி தான்ஜியுடன் 2011 முதல் ரகசியமாக வசித்து வந்தார் அங்கொடா லொக்கா என்னும் இலங்கை நிழல் உலக தாதா. திடீர் உடல்நிலை பாதிக்கப்பட்ட அங்கொடா லொக்கா 2010 ஜூலை 4ல் உயிரிழந்தார். 

பெயர் , முகவரி உட்பட போலியான ஆவணங்கள் மூலம் கோவையில் (Coimbartore) பிரேத பரிசோதனை செய்து மதுரையில்  அங்கொட லொக்காவின் உடல் எரிக்கப்பட்ட வழக்கில் இறந்தது அங்கொட லொக்கா தான் என்பதை அறிவியல் பூர்வமாக உறுதி செய்ய DNA பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்ட நிலையில்  கொரொனா தொற்று காரணமாக பணிகள் முடங்கியது. 

இந்நிலையில் இலங்கை (Sri Lanka) அரசின் உதவியுடன் அங்கொடா லொக்காவின் தாயார் சந்திரிகா பெரேராவின் DNA மாதிரிகள் சேகரிக்கப்பட்டு , அங்கொட லொக்காவின் DNA மாதிரிகளுடன் ஓப்பீடு செய்யப்பட்டதில் இறந்தது அங்கொட லொக்காதான் என முடிவுகள் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் மறுபுறம் விசாரணையும் மறுபுறம் சூடுபிடிக்க துவங்கியிருக்கிறது.

கோவை அரசு மருத்துவமனையில் போலி சான்றிதழ் கொடுத்து அவரது சடலத்தை பெற்று சென்று மதுரையில் தகனம் செய்தனர். 

பீளமேடு போலிசார் விசாரித்து வந்த நிலையில் வழக்கு சி. பி. சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி இலங்கையை சேர்ந்த அம்மானி தான்ஜி சடலத்தை எரிக்க உடந்தையாக இருந்த மதுரையைச் சேர்ந்த வக்கீல் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரை சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

ALSO READ:இலங்கை டான் அங்கோடா லோக்காவின் மரணம் ஒரு கொலையா? வழக்கு CBCID-க்கு மாற்றம்!! 

அம்மானி தான்ஜி முகாமில் வைக்கப்பட்டுள்ளார். அங்கொட லொக்கா (Angoda Lokka) இந்தியாவில் தங்க அடைக்கலம் கொடுத்த அவரது கூட்டாளிகளை கோவை சி. பி. சி. ஐ.டி. போலீசார் தேடி வந்தனர். அவர்கள் பெங்களூருவில் பதுங்கியிருக்கும் தகவல் அறிந்து, டி. எஸ். பி. , சிவகுமார் தலைமையில் தனிப்படையினர் விரைந்து சென்றனர். பெங்களூரு, குள்ளப்பா சர்க்கிள் பகுதியில் பதுங்கியிருந்த இலங்கை அதுரகிரியாவை சேர்ந்த சனுக்க தனநாயக்க என்ற போதை பொருள் கடத்தல் நபரையும் அவருக்கு தங்க இடம் கொடுத்ததாக பெங்களூரு சுப்பையா பாளையத்தை கோபாலகிருஷ்ணன் ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Open photo

கைது செய்யப்பட்டவர்களை கோவைக்கு அழைத்து வந்து சி. ஜே. எம். கோர்ட் நீதிபதி சஞ்சீவி பாஸ்கர் இல்லத்தில் ஆஜர்படுத்தினர். இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து பெருந்துறை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது எரிக்கப்பட்டது அங்கொட லொக்காதான் என முடிவாகியிருப்பதால்  பெங்களூருவில் கைது செய்யப்பட்ட இருவரையும் சிபிசிஐடி போலீசார் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவுசெய்து இன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள். 

அடுத்தடுத்த திருப்பங்களால் மீண்டும் சூடுபிடிக்க துவங்கியுள்ளது அங்கொட லொக்கா வழக்கு.

ALSO READ:வேலூர் அருகே மழையின் காரணமாக பாறை உருண்டு விழுத்ததில் இருவர் உயிரிழப்பு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *