Share on Social Media


மார்வெல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருந்த திரைப்படமான Spiderman No Way Home உலகம் முழுவதும் வெளியாவதற்கு ஒருநாள் முன்கூட்டியே இன்று இந்தியாவில் வெளியாகி உள்ளது.  Marvel படங்களிலேயே அதிகம் எதிர்பார்ப்பில் இருந்த படமாக மாறியது இந்த Spiderman திரைப்படம்.  காரணம் இப்படத்தில் 3 ஸ்பைடர்மேன்களும் வருவார்களா என்ற எதிர்பார்ப்பே.  சாம் ரைமி இயக்கத்தில் டோபி மாகுவேர் நடித்த ஸ்பைடர் மேன் மற்றும் மார்க் வெப் இயக்கத்தில் ஆண்ட்ரூ கார்பீல்ட் நடித்த அமேஜிங் ஸ்பைடர்மேன் ஆகிய இருவரும் ஸ்பைடர் மேன் No Way Home படத்தில் வரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.  ஆனாலும் படதரப்பில் இருந்து இது குறித்த சஸ்பென்ஸ் இருந்து கொண்டே இருந்தது.

Spider-Man: Far from Home-ல் கடைசியில் ஸ்பைடர்மேன் யார் என்பது அனைவருக்கும் தெரியவரும்.  அதன் தொடர்ச்சியாக Far from Home தொடங்குகிறது.  தன்னுடைய அடையாளம் வெளிவந்ததால் ஹீரோ டாம் ஹாலண்ட் சந்திக்கும் பிரச்சனைகள், அவரது நண்பர்கள் சந்திக்கும் பிரச்சைனைகள் பற்றி இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.  ஸ்பைடர்மேன் மீது உள்ள குற்றச்சாட்டால் அவருக்கு மட்டும் இன்றி அவரது நண்பர்களுக்கும் கல்லூரியில் அட்மிஷன் கிடைக்காமல் போகிறது.  எனவே, தான் யார் என்பதை அனைவரும் மறக்க வேண்டும் என்று எண்ணி சில முயற்சிகளில் ஈடுபடுகிறார் டாம் ஹாலண்ட் (Tom Holland).  அதனால் ஏற்படும் பாதிப்புகள், அதில் இருந்து வெளியில் வந்தாரா, மற்ற இரண்டு ஸ்பைடர்மேன்களும் படத்தில் வந்தார்களா என்பதே Spiderman No Way Home படத்தின் கதை.

spiderman

பொதுவாக மார்வெல் படங்களில் இடம்பெறும் நகைச்சுவை, பிரம்மாண்ட சண்டை காட்சிகள், சோகம் என அனைத்தும் இந்த படத்திலும் இடம்பெறுகிறது.  இவை படத்திற்கு மேலும் கூடுதல் வலு சேர்க்கிறது.  மற்ற படங்களில் இடம் பெற்ற வில்லன்களை ஹீரோ டாம் ஹாலண்ட் எப்படி சமாளிக்கிறார் என்பது சுவாரஸ்யமாக இருந்தது.  குறிப்பாக கிளைமாக்ஸ் பயிட் சீன் மிக சிறப்பாக அமைந்துள்ளது.  தனது மற்ற படங்களில் வசூலை இந்த ஸ்பைடர்மேன் படம் முறியடிக்க வேண்டும் என்று மார்வெல் – சோனி நிறுவனங்கள் திட்டம் போட்டு இருந்தன.  அவை நிஜமாகும் என்றே இப்படம் பார்த்த பின்பு தோன்றுகிறது.  ரசிகர்கள் என்ன எதிர்பார்த்து இப்படத்திற்கு வருவார்களோ அதனை கச்சிதமாக திரைக்கதையில் சேர்த்து படமாக்கி உள்ளனர்.

Spiderman No Way Home பற்றிய தகவல்களை மிகவும் பத்திரமாக வைத்து இருந்தாலும் ட்ரைலர், படம் சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகளின் படங்கள் வெளிவந்து கொண்டே இருந்தன.  இவற்றை படநிறுவனம் வெளியிடுகிறதோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியிலேயே எழும் அளவிற்கு அனைத்தும் லீக் ஆனது.  மொத்தத்தில் இந்த Spiderman No Way Home படம் முடித்து வீட்டிற்கு வந்தாலும் நம்மை படம் பற்றி பேச வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ALSO READ | ரிவியூவர் இட்டிஷ் பிரஷாந்தை கிழித்து தொங்கவிட்ட ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ இயக்குனர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.