Share on Social Media


ரஷ்யா தனது பழைய செயற்கைக்கோளை,  செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதத்தின் உதவியுடன், அதனை தாக்கி அழித்தது. இதனால், விண்வெளியில்  பெரிய அளவில் குப்பை  உருவாக்கியுள்ளதால், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கும், அதில் இருந்த  வீரர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற” வகையில் செய்யபட்டதாக ரஷ்யாவை அமெரிக்கா கண்டித்துள்ளது. 

செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதம் என்றால் என்ன?

செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதம் விண்வெளியில் இருக்கும் செயற்கைக்கோள்களை அழிக்க பூமியில் இருந்து ஏவப்படுகிறது. உலகின் பல நாடுகளில் இந்த தொழில்நுட்பம் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் அமெரிக்கா (America), ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா மட்டுமே இதுவரை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

போரின் வரையறையை மாற்றிவிடும் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்கள் 

2019,  மார்ச் 27 அன்று, பூமியில் இருந்து 300 கிமீ உயரத்தில் உள்ள தனது செயலற்ற செயற்கைக்கோள் ஒன்றை இதேபோன்ற ஏவுகணை மூலம் இந்தியா சுட்டு வீழ்த்தியது. செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்கள் வழக்கமான போரின் வரையறையை முற்றிலுமாக மாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில், எதிரி நாட்டை மண்டியிட, விலையுயர்ந்த போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களைக் கொண்டு தாக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால்  விண்வெளியில் (Space) இருக்கும் செயற்கை கோள்களை சில நொடிகளில் அழித்து விடலாம்.

ALSO READ | செயற்கைக்கோளை அழித்த ரஷ்யா; விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; கலக்கத்தில் NASA..!!

விண்வெளியில் போர் 

இந்த முறை விண்வெளியில் ஒரு போர் வெடித்தால், எதிரி நாடுகள் ஒருவருக்கொருவர் செயற்கைக்கோள்களை ஏவுகணைகளால் தாக்கினால் என்ன நடக்கும். அதனால் எல்லா டிடிஎச்களும் வேலை செய்யாது, இதனால், டிவி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு நின்று விடும். உங்கள் இணையமும் இயங்காது. இணைய சேவை இல்லயென்றால், உங்கள் அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்து விடும் எனலாம். 

ALSO READ | விண்வெளியில் துணி குப்பை அதிகமாகி விட்டது, சோப்பு அனுப்ப NASA திட்டம்

 ஜிபிஎஸ் சிஸ்டம் நின்றுவிடும், காற்றில் பறக்கும் விமானங்கள் வழி தவறிவிடும், கப்பல்கள் கூட  வழி தெரியாமல் தள்ளாடும். ஒரே அடியில் உலகப் பொருளாதாரம் ஸ்தம்பித்து விடும்.  நீங்கள் ஆன்லைனில் பணம் செலுத்த முடியாது, ஏடிஎம் மற்றும் வங்கி வேலை செய்வதை நிறுத்தும். உலகத்தின் தகவல் தொடர்பு அமைப்பு ஸ்தம்பித்துவிடும். நிலம், வான், நீர் மூலம் எதிரி மீது தாக்குதல் நடத்த  முடியாது. இதைத் தவிர, வானிலை முன்னறிவிப்பு இருக்காது. பயிர்கள் பெரிய அளவில் அழிந்து உலகம் முழுவதும் பஞ்சமும் வறட்சியும் ஏற்படும்.

இது போர் ஒரு சில நிமிடங்களில் இருந்து சில மணி நேரங்கள் வரை நீடிக்கும் ஒரு போராக தான் இருக்கும். இதில் யாரும் இறக்க மாட்டார்கள், ஆனால் உங்கள் வாழ்க்கை 200 ஆண்டுகளுக்கு பின்னால் சென்று விடும்.

ALSO READ | விண்வெளியில் திரைப்பட ஷூட்டிங்; வெற்றிகரமாக திரும்பும் படக் குழு..!!

தற்போது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் விண்வெளியில் உள்ளன. ஆனால் இந்த பத்தாண்டுகளின் முடிவில் அதாவது 9 ஆண்டுகளுக்குள் இவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்திற்கும் அதிகமாக அதிகரிக்கும். ஆனால் இந்த நேரத்தில் பல செயற்கைக்கோள்களும் பயனற்றதாகிவிடும். அவற்றை அழிப்பதும் உலகிற்கு பெரும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *