Share on Social Media

புதுடெல்லி: சமீப காலங்களில், பாலிவுட்டில் பயோபிக் திரைப்படங்கள் எடுப்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை திரைக்கு கொண்டு வரத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், பார்வையாளர்களும் அதுபோன்ற படங்களை மிகவும் விரும்புகிறார்கள். மகேந்திர சிங் தோனி (MS Dhoni), முகமது அசாருதீன் (Mohammad Azharuddin) மற்றும் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) ஆகியோரின் வாழ்க்கை வரலாறு பார்வையாளர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் நிறைய பாராட்டுக்களைப் பெற்றது. அதேபோல கபில் தேவ், மிதாலி ராஜ் போன்ற வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படங்கள் எடுப்பது குறித்து பேச்சுவாரத்தை நடைபெற்று வருகிறது. இப்போது இந்த வரிசையில் சவுரவ் கங்குலியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது:
சமீபத்திய தகவல்களின்படி, இந்திய அணியின் மிக வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக அழைக்கப்படும் சவுரவ் கங்குலி தனது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க கிரீன் சிக்னல் தெரிவித்துள்ளார். தனது வாழ்க்கை பயணத்தை கதையாக எடுக்க சவுரவ் கங்குலி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இந்த படம் வியாகாம் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்படும். தற்போது, ​​இப்படத்தில் சவுரவ் கங்குலியின் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

சவுரவ் கங்குலி கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர்:
இருப்பினும், இந்த படத்தில் சவுரவ் கங்குலியின் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரைக் காணலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் மறுபுறம், சில காலத்திற்கு முன்பு தாதா (சவுரவ் கங்குலி) தனக்கு பிடித்த பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ | இங்கிலாந்து அணியை கதறவிட்ட தினம்! 19 ஆண்டுகள் – மறக்க முடியாத போட்டி!

திரையில் சவுரவ் கங்குலி கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்ற யூகங்கள் எழுந்துள்ளன. இத்தகைய சூழ்நிலையில், திரையில் “தாதா” யார்? என்ற கேள்வி சமூக ஊடகங்களில் எழுந்துள்ளது.

விரைவில் படம் குறித்து முழு விவரம்:
இந்த படம் குறித்து, சவுரவ் கங்குலி சமீபத்தில் அளித்த பேட்டியில், “ஆம், எனது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க சம்மதத்தை அளித்துள்ளேன். இது இந்தி மொழியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் படத்தை யார் இயக்குகிறார்கள்? யார் நடிக்கிறார்கள்? என்பது குறித்து எந்த தகவலும் கூறமாட்டேன். அனைத்து உறுதி செய்யப்பட்ட பின்னர் முழு விவரத்தை கூறுகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள் எனக் கூறியுள்ளார். அதே நேரத்தில், இந்த படத்திற்க்கான ஸ்கிரிப்ட் இன்னும் எழுதப்பட்டு வருவதாக படம் தொடர்பான வட்டாரங்கள் கூறுகின்றன.

உற்சாகமடைந்த ரசிகர்கள்:
சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாக தயாரிக்கப்படுகிறது என்று இறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவரின் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், ரன்பீர் கபூருக்கு வாய்ப்புகள் மிக அதிகமாக இருப்பதாக தெரிகிறது.  எதுவாக இருந்தாலும், தாதாவின் வாழ்க்கை குறித்து படம் எடுக்கப்படுகிறது என்ற செய்தியை கேட்டு அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

ALSO READ | தோனி ரன் அவுட் ஆன தினம் இன்று. நடந்தது என்ன? தவறு எங்கே நடந்தது?

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *