Share on Social Media


நமது காலை உணவானது நமது உடல் ஆரோக்கியத்துடன் நெருங்கிய தொடர்புடையதாய் இருக்கிறது. இரவு முழுவதும் எதுவும் உண்ணாமல் இருந்துவிட்டு காலையில்தான் நமது நாளின் முதல் உணவை எடுத்துக்கொள்கிறோம். அது ஆரோக்கியமானதாக இருப்பது மிக முக்கியமாகும். எனவே தினமும் இரவு பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகளை ஊற வைத்து பிறகு அதிகாலையில் அதை உண்பது நல்லது என கூறப்படுகிறது.

​காலை உணவு

காலையில் ஊட்டச்சத்து அதிகமாக கொண்ட உணவுகள் மூலம் உங்கள் நாளை துவங்க வேண்டும். நட்ஸ்களை கொண்டு தனது நாளை துவங்கும் பழக்கம் மக்கள் பலரிடம் இருக்கும் பழக்கமாக உள்ளது. காலை உணவில் நட்ஸை சேர்ப்பதன் மூலம் அன்றைய நாளுக்கான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை நாம் பெற முடியும். மருத்துவர் ஒருவர் கூறும்போது தண்ணீரில் ஊற வைத்த பாதாமை காலையில் எடுத்துக்கொள்வது நமக்கு பல நன்மைகளை அளிக்கிறது என கூறியுள்ளார்.

​ஊறவைத்த பாதாமின் நன்மைகள்

samayam tamil Tamil News Spot

ஊறவைத்த பாதாமானது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை செய்யக்கூடியதாக உள்ளது. பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் ஆகியவை நிறைந்து காணப்படுகிறது.

மேலும் பாதாம் நமது ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கு வெகுவாக உதவுகிறது, நமது உடலில் செரிமானத்தை மேம்படுத்தவும், கொழுப்பின் அளவை குறைக்கவும் உதவுவதால் இது உடல் எடை இழப்பிற்கும் உதவுகிறது. இது உங்கள் ஹார்மோன் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் உடற்பயிற்சி செய்பவர்கள் இதை தினசரி உட்கொள்வது அவர்களுக்கு நன்மை பயக்கும். எனவே இனி தினமும் இரவில் சிறிதளவு நீரில் பாதாமை ஊற வைக்க மறக்க வேண்டாம். இந்தியாவில் பாதாம் மிக எளிதாகவே கிடைகக்கூடிய நட்ஸாக உள்ளது.

அரிசியை சமைக்கும்முன் ஏன் ஊறவைக்க வேண்டும்… ஊறவைக்காமல் சமைத்தால் ஏற்படும் ஆபத்துகள் என்ன…

​ஊறவைத்த அக்ரூட் பருப்புகளின் நன்மைகள்

samayam tamil Tamil News Spot

வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்புகள் அதிகமான அளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை கொண்டு காணப்படுகிறது. இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது உடலுக்கு அதிக நன்மைகள் பயக்கக்கூடியது. இது குறிப்பிட்ட உணவுகளில் மட்டுமே கிடைக்கிறது. மேலும் அக்ரூட் பருப்புகளில் வைட்டமின் ஈ, ஃபோலிக் அமிலம், புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை உள்ளன.

பொதுவாக அக்ரூட் பருப்புகள் மூளை உணவு என அழைக்கப்படுகின்றன, ஏனெனில் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு இது உதவுகிறது. மேலும், அக்ரூட் பருப்புகளில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, தாமிரம் மற்றும் துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு பல்வேறு வகையில் நன்மை செய்யக்கூடிய ஊட்டச்சத்துக்களாகும். ஊறவைத்த அக்ரூட் பருப்புகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றன. இவை இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது, எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக அக்ரூட் பருப்புகள் உள்ளன. ஆகவே இந்த இரண்டு நட்ஸ்களும் நமது நாளை ஆரோக்கியமாக துவங்க உதவியாக இருக்கின்றன.

​உடற்பயிற்சி

samayam tamil Tamil News Spot

உடற்பயிற்சி செய்வது என்பது நமது உடலுக்கு தேவையான ஒரு பழக்கமாகும், தற்போதைய சூழலில் மக்கள் உடற்பயிற்சி செய்வது என்பதே குறைந்து வருகிறது. உங்கள் நாளை சுறுசுறுப்பாக துவங்குவதற்கு நீங்கள் அவசியம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் நீங்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். மேலும் உங்களது உடலில் எந்த வித ஆரோக்கிய கோளாறுகளும் ஏற்படாமல் இருக்கும். நமது வாழ்வில் உடற்பயிற்சி செய்வது என்பது ஒரு ஆரோக்கியமான பழக்கமாகும்.

தைராய்டு உள்ளவர்களுக்கான பழ டயட்… இதன்மூலம் எப்படி தைராய்டு ஹார்மோன் சுரப்பை முறைப்படுத்தலாம்…

​தியானம்

samayam tamil Tamil News Spot

மன அழுத்தம் என்பது நமது ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கக்கூடிய ஒரு விஷயமாக உள்ளது. தினமும் மன அழுத்தத்தை அதிகமாக சந்திப்பவர்கள் உடல் ரீதியாகவும் பாதிப்பை சந்திக்கின்றனர். தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறையில் மன அழுத்தம் என்பது அனைவருமே சந்திக்கக்கூடிய பொதுவான பிரச்சனையாக உள்ளது. இவற்றை நாம் சரி செய்யாவிட்டால் அதனால் பல உடல் பாதிப்புகளை நாம் சந்திக்க நேரிடும்.

மன அழுத்தத்தை குறைக்க உதவும் பயிற்சியாக யோகா மற்றும் தியானம் உள்ளது. எனவே தினமும் அதிகாலையில் யோகா மற்றும் தியானம் செய்வதை பழக்கமாக்கி கொள்ளுங்கள். அது உங்களது நாளை சிறப்பானதாக மாற்ற உதவுகிறது.

​காஃபினை தவிர்க்கவும்

samayam tamil Tamil News Spot

காலையில் எழுந்ததும் பெரும்பாலான மக்கள் பின்பற்றும் ஒரு பொதுவான பழக்கமாக உலகில் ஒரு பழக்கம் உள்ளது எனில் அது தேநீர் அல்லது காபி அருந்துவது ஆகும். நம்மில் பலருக்கு தினசரி தேநீர் அல்லது காபி அருந்தாமல் அன்றைய நாளை கடக்க முடிவதில்லை. ஆனால் அதிகாலையில் காபி அருந்துவது உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. எனவே முடிந்தவரை காலை வேளையில் தேநீர் அல்லது காஃபின் அருந்துவதை தவிர்க்கலாம். அல்லது தவிர்க்க முடியாதவர்கள் வெறும் வயிற்றில் அருந்தாமல் தண்ணீர் குடித்துவிட்டு சிறிது நேரம் கழித்து தேநீர் அருந்தலாம், ஏனெனில் வெறும் வயிற்றில் தேநீர் அருந்துவது நீரிழிவு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

தினமும் முட்டை சாப்பிட்டு ஆறே மாதத்தில் 36 கிலோ எடையை குறைத்த இளைஞர்…

​ஆரோக்கியமான காலை உணவு

samayam tamil Tamil News Spot

காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவானது எப்போதும் ஆரோக்கியமானதாக இருப்பது அவசியமாகும். எனவே செயற்கை நிறமூட்டப்பட்ட உணவுகள் மற்றும் அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை காலை உணவுகளாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவற்றை முடிந்தவரை காலை வேளையில் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக ஆரோக்கியமான உணவுகளை காலை உணவுகளாக எடுத்துக்கொள்ளலாம். பாசி பருப்பு, முழு தானியங்கள் மற்றும் இட்லி போன்ற உணவுகள் ஆரோக்கியமானவை ஆகும். எனவே அந்த மாதிரியான உணவுகளை காலை உணவாக தேர்ந்தெடுக்கவும்.

ஏதேனும் ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்களாக நீங்கள் இருந்தால் உணவில் மாற்றத்தை செய்வதற்கு முன்பு உங்களது மருத்துவரிடம் இதுக்குறித்து கலந்துரையாடவும்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *