Share on Social Media

அரைசதம் அடித்த உற்சாகத்தில், புவனேஷ்வர் வீசிய பந்தை, ஃபெர்னாண்டோ புல் ஷாட் ஆட முயல, பந்து டாப் எட்ஜாக, அதனை மிட்விக்கெட்டில் நின்று கேட்ச் ஆக்கினார் க்ருணால். தனஞ்செயாவும் வெகுநேரம் நீடிக்கவில்லை. இரண்டாவது ஸ்பெல்லை வீச வந்த சஹார், அருமையான ஒரு நக்குல் பாலினால், தனஞ்செயாவை ஆட்டமிழக்கச் செய்தார். 32 ரன்களோடு வெளியேறினார், தனஞ்செயா.

கிட்டத்தட்ட பாதி ஓவர்களே வீசப்பட்ட நிலையில், போட்டியின் மிச்சக் கரையைக் கடக்கும் பொறுப்பு, கேப்டன் ஷனகா மற்றும் அசலங்காவின் தோளில் விழ, எட்டு ஓவர்கள் இணைந்திருந்த இருவரும், 38 ரன்களைச் சேர்த்தனர். இதன்பிறகு, ஷனகா மற்றும் ஹசரங்காவினை, முறையே, சஹால் மற்றும் சஹார் வெளியேற்ற, 11 ஓவர்கள் மிச்சமிருந்த நிலையில், 194 ரன்களைச் சேர்த்திருந்தது, இலங்கை.

ஒருபுறம், கருணரத்னே போன போட்டியில், விட்டதில் இருந்து தொடர்வதைப் போல், கவனத்தோடு ரன்களைச் சேர்க்க ஆரம்பித்தார். இன்னொருபக்கம் அரைசதம் கடந்த அசலங்காவின் பொறுப்பான ஆட்டம் தொடர்ந்தது. போன போட்டியைப் போல, டெத் ஓவர்களில், இலங்கை ரன்களைக் குவித்து விடுமோ என்ற எண்ணம் எழ, புவனேஷ்வர், ஒரு ஆஃப் கட்டரை வீசி, அசலங்காவினை வெளியேற்றினார்.

புவனேஷ்வர் வீசிய இறுதி ஓவரிலும், இன்னொரு ஸ்லோ பாலினால், சமீராவின் விக்கெட் விழ, இஷான் செய்த அதிவேக ரன்அவுட்டால், சண்டகன் வெளியேறினார். எனினும், கடைசிவரை ஆட்டமிழக்காமல், 33 பந்துகளில், 44 ரன்களைச் சேர்த்த கருணரத்னேயால், 275 ரன்களைக் குவித்தது இலங்கை.

இரண்டு பேட்ஸ்மேன்கள் அரைசதமடிக்க, மேலும் மூன்று பேட்ஸ்மேன்கள், 30+ ஸ்கோரைச் சேர்ந்திருக்க, 275 ரன்களோடு முடித்தது இலங்கை. இந்தியாவோ, 2019-க்கு பிறகு, பவர்பிளே ஓவர்களில், விக்கெட் எடுக்கத் தவறுவதையும், டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்குவதையும், பகுதி நேர வேலையாகச் செய்து வருகிறது.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *