Share on Social Media


முப்பது வயதை நெருங்கும்போது நம்மில் பலருக்கு தொழில் மற்றும் வீட்டில் உள்ள பணிகள் காரணமாக நம்மை நாமே கவனித்துக் கொள்வது மிகவும் சிரமமாக இருக்கிறது. சிலர் 30 வயதிலேயே ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களை தேர்வு செய்வார்கள்.

பலரும் 30 வயதை நெருங்கும் போது தான் இது போன்ற ஆரோக்கியமான விஷயங்களில் ஈடுபாடு காட்டுவார்கள். இந்த கட்டுரையில் வயது ஆனாலும் நம்மை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும் சில வழிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

​வாழ்க்கை முறை மாற்றங்கள்

நமது சருமத்திற்கு எந்த மாதிரியான சரும பராமரிப்பு பொருட்களை நாம் பயன்படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியமானது.

தற்போது கிடைக்கும் பல அழகுசாதனப் பொருட்களில் ரசாயனங்கள் அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன. எனவே இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பொருட்களை பயன்படுத்தலாம்.

​நீர்ச்சத்து

samayam tamil Tamil News Spot

வயதாகும் போது நமது சருமத்திற்கு தேவையான நீர் சத்தினை பராமரிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.

பெண்களுக்கு ஒரு நாளைக்கு 2.5 லிட்டர் முதல் ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 3.5 லிட்டர் வரை தண்ணீர் உடலுக்கு அவசியமாகிறது.

எனவே இந்த அளவில் எந்தவித குறைபாடும் இன்றி தினசரி தண்ணீர் அருந்த வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

​ஊட்டச்சத்து

samayam tamil Tamil News Spot

நாம் என்ன சாப்பிடுகிறோம் அதைப் பொறுத்தே நமது வளர்சிதை மாற்றங்களில் மாறுபாடு தெரிகிறது.

ஆரோக்கியமற்ற உணவு காரணமாக வளர்சிதை மாற்றம் குறைவதால், எவ்வளவு கலோரி உணவு உண்கிறோம் என்பதே நாம் கண்காணிக்க வேண்டும். சமச்சீரான உணவை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது.

hair care routine: இதெல்லாம் செஞ்சா முடி கொட்டாதுனு காலங்காலமா நம்பற கட்டுக்கதைகள் என்னென்ன… உண்மை என்ன…

​ஒமேகா3 மற்றும் வைட்டமின்கள்

3-

அதிக கொழுப்பு இல்லாத பால் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கோழி இறைச்சி, கடல் உணவுகள், முட்டை, சோயாப்பொருட்கள் மற்றும் நட்ஸ் போன்றவற்றை உணவில் தவிர்க்காமல் சேர்த்து கொள்ள வேண்டும்.

கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்த உணவுகளை தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மீன் மற்றும் பிற கடல் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானவை. இதில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் அயோடின் சத்துக்கள் அதிகளவில் உள்ளன. இவை நம்மை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

​உடற்பயிற்சி

samayam tamil Tamil News Spot

நமது அன்றாட வேலை மற்றும் வீட்டு காரியங்களின் காரணமாக பல்வேறு மன அழுத்தங்கள் நமக்கு ஏற்படலாம்.

மன அழுத்தம் என்பது நமது ஆரோக்கியத்திற்கு ஒரு எதிரி என்றே கூற வேண்டும்.

தினசரி உடற்பயிற்சி மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை சரிசெய்து, நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

cooling foods: குளிர்காலத்தில் ஜில்லுனு இருக்கும் உணவுகளை சாப்பிட்டா என்னென்ன பிரச்சினைகள் வரும்…

​தூக்கம்

samayam tamil Tamil News Spot

தற்போது அதிக நேரங்களை மொபைல் போன்களில் செலவிடுகிறோம். படுக்கை அறை முதல் பாத்ரூம் வரை நமது எல்லா இடங்களிலும் மொபைல் போனுக்கு இடம் கொடுத்துவிடுகிறோம்.

நமது உடலானது நாள்தோறும் செய்யும் பணிகளில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். எனவே நமது உடலுக்குப் போதுமான அளவு தூக்கத்தைக் கொடுக்க வேண்டும்.

​புகைப்பிடித்தல் மற்றும் குடிப்பழக்கம்

samayam tamil Tamil News Spot

புகைப்பிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் இவை இரண்டுமே நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடானது. இந்த இரண்டு பழக்கங்கள் உங்களது சரும ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது.

protein rich food: கருப்பு கொண்டைக்கடலை சூப் சாப்பிட்டா இந்த பலனெல்லாம் கிடைக்கும்… செய்வது எப்படி? ரெசிபி உள்ளே…

​சரும பராமரிப்பு

samayam tamil Tamil News Spot

சருமத்திற்கு என்று சிறிது நேரம் ஒதுக்கி நீங்கள் பராமரிக்க வேண்டும். வைட்டமின் சி நிறைந்த சீரம்களை பயன்படுத்தலாம். கொலாஜன் நமது சருமத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்ற

சரும பராமரிப்பு என்பது உங்கள் முகத்தில் உள்ள அழுக்குகளை சுத்தப்படுத்துதல் போன்றதாகும்.

சூரிய ஒளியில் செல்லும் போது சன்ஸ்கிரீன் போன்ற கிரீம்களைப் பயன்படுத்தலாம். குளித்தவுடன் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது சருமம் வறண்டு போகாமல் இருக்க உதவுகிறது.

அழுத்தத்தை குறைத்து சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்துகிறது.

இது வயதாவதால் சருமத்தில் ஏற்படும் கோடுகள் மற்றும் சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது.

​40 வயதாகும்போது சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

40-

நமது தோலின் மேல் அடுக்குகள் மற்றும் தோலில் உள்ள ரத்த நாளங்கள் மென்மையாகிறது.

சருமச் செல்களில் இணைக்க உதவும் புரதங்கள் குறைந்து சருமத்தில் நெகிழ்ச்சித் தன்மை இழக்கப்படுகிறது. இதனால்தான் சுருக்கங்கள் ஏற்படுகின்றன.

மேலும் வயதாகும்போது சருமம் தனக்குத் தேவையான அளவைவிட குறைந்த அளவான எண்ணெயை உற்பத்தி செய்வதால் சருமத்தில் அதிகப்படியான வறட்சி ஏற்படுகிறது.

​ரெடினால் நிறைந்த சீரம்

samayam tamil Tamil News Spot

ரெடினால்களில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது. இது கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து சருமச் சிதவை குறைக்கின்றன.

நீங்கள் ஸ்கின் பாலிஷ்போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். இது இறந்த செல்களை வெளியேற்றுவதற்கு உதவுகிறது.

சில லேசர் சிகிச்சைகள் வயதாவதால் ஏற்படும் புள்ளிகள் போன்றவற்றை சரி செய்வதற்கும், சரும நிறத்தை மீட்டெடுப்பதற்கு உதவுகிறது.

குளிர்காலத்தில் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் முரப்பா… இஞ்சி தவிர வேறு எதிலெல்லாம் செய்யலாம்?

​40 வயதுக்கு மேல் நாம் உண்ண வேண்டிய உணவுகள்

40-
  • முழு தானியங்கள்
  • பழங்கள்
  • நெய்
  • குறைவான உப்பு
  • குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள்
  • வைட்டமின் சி நிறைந்த பழங்கள்

எனவே 40 வயதை நெருங்கும் போது இது போன்ற வாழ்கை முறை மாற்றங்களைச் செய்து கொள்வதன் மூலம் நாம் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்க முடியும்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *