Share on Social Media


பொதுவாக உடலின் ஆரோக்கியத்தை சரியான அளவில் பேணுவதில் நாம் எவ்வளவு அக்கறை காட்டுகிறோமோ அதைவிட நாம் சருமத்தை பாதுகாப்பதில் காட்ட வேண்டும். உடலின் கவசமாக விளங்கும் சருமம் ஏகப்பட்ட சவால்களையும் சந்திக்கிறது.

குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சி. சருமப் பிரச்சினைகள் ஏற்பட இரசாயனங்கள் நிறைந்த அழகுசாதனப் பொருள்கள் எப்படி காரணமோ அதேபோல சுற்றுச்சூழலும் முக்கிய பங்காற்றுகிறது. இதனை கையாள்வதற்கான ஒரே வழி ஈரப்பதம் இழப்பை தடுப்பதற்கு தினசரி மாய்ஸ்சரைசர்கள் மற்றும் சன்ஸ்கிரீன்கள் பயன்படுத்துவதாகும்.இவை உங்கள் சருமத்திற்கு மென்மையையும், பாதுகாப்பையும் வழங்கிறது. அத்தகைய குளிர்கால சரும வறட்சியை எதிர்த்துப் போராடும் மாய்ஸ்சரைசிங் ஃபேஸ் பேக்குகள் பற்றி நாம் இக்கட்டுரையில் காண்போம்.

​சருமத்துக்கேற்ற மாய்ஸ்சரைசரை தேர்ந்தெடுங்கள்

மாய்ஸ்சரைசர்கள் திரவ மற்றும் கிரீம் வடிவங்களில் கிடைக்கின்ற என்றாலும் நாம் நம் உடலின் சருமத்திற்கு ஏற்றவற்றையே தேர்வு செய்ய வேண்டும். சாதாரண மற்றும் வறண்ட சருமத்திற்கு கிரீம் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது நல்லது.

நன்கு சுத்தம் செய்து டோனிங் செய்த பிறகு அதைப் பயன்படுத்த வேண்டும். எண்ணெய் பசையுள்ள சருமம், சாதாரண அல்லது வறண்ட சருமத்தை விட ஈரப்பதத்தை சிறப்பாக தக்க வைத்திருக்கும்.

எனவே குளிர்காலத்தில் எண்ணெய் சருமம் ஈரப்பதம் குறைவாக இருக்கும். இதனால் சருமத்தில் தண்ணீர் பட்டவுடன் அது காய்ந்து உடனேயே இறுக்கமாவதைப் போல் உணர்வோம். இதற்கு லேசான மாய்ஸ்சரைசிங் லோஷனைப் பயன்படுத்த வேண்டும் அல்லது “எண்ணெய் இல்லாத” டே க்ரீமைப் உபயோகிக்கலாம்.

​பயன்படுத்தும் முறை

samayam tamil Tamil News Spot

மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த முதலில் முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும்.

பின் முகத்தில் மாய்ஸ்சரைசரை தடவி, உங்கள் விரல் நுனியைக் கொண்டு மென்மையாக சருமத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தொடர்ந்து டிஸ்யூ பேப்பர்கள் அல்லது காட்டன் துணிகள் மூலம் அதிகப்படியான இடங்களில் துடைக்கவும்.

எடையும் ஊளைச்சதையும் குறையணுமா? வாரத்துல ரெண்டு நாள் இந்த சுரைக்காய் சூப் குடிங்க… ரெசிபி இதோ…

​விதவிதமான மாய்ஸ்சரைசர்கள்

samayam tamil Tamil News Spot

வீட்டில் தயாரிக்கப்படும் நேச்சுரல் மாய்ஸ்சரைசர்கள் பயன்படுத்துவது தான் சிறந்தது. தேன் மற்றும் கற்றாழை போன்ற பொருட்களைப் பயன்படுத்தி எளிய முறையிலேயே மாய்ஸ்சரைசிங் பேக்குகளை வீட்டில் தயாரிக்கலாம், ஏனெனில் அவை சக்திவாய்ந்த இயற்கை மாய்ஸ்சரைசர்கள். தேன் சருமத்திற்கு ஈரப்பதத்தை தரும் அதே நேரத்தில் கற்றாழை சருமத்தை மென்மையாக்குகிறது மற்றும் ஈரப்பதமாக்குகிறது.

​கற்றாழை ஜெல்

samayam tamil Tamil News Spot

தினமும் நேரடியாக சருமத்தில்கற்றாழை ஜெல் அல்லது சாறு தடவி சுமார் 20 நிமிடங்கள் விட்டுவிட்டு, வெறும் நீரில் கழுவவும். இது சருமத்தை மென்மையாக வைத்திருப்பதோடு, சரும பாதிப்புகளை குணப்படுத்தும் பண்புகளையும் கொண்டுள்ளது. இதனை தயாரிக்க கற்றாழை ஜெல் மற்றும் மினரல் வாட்டரை சம அளவில் கலந்து கிரீம் உருவாகும் வரை குறைந்த அளவு தீயில் வைத்து சூடாக்க வேண்டும். பின் ஆறியதும் காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.

3 தேக்கரண்டி கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், தேன், ரோஸ் வாட்டர் சிறிதளவு, குப்பைமேனி செடியின் இலை மற்றும் கிளிசரின் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அனைத்து பொருட்களையும் ஒன்றாக கெட்டியாகும் வரை கிளறவும். பின் காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.

கொத்தமல்லித் தண்டுகளை இனி தூக்கி வீசாதீங்க… இந்த மாதிரி சூப் செஞ்சு குடிங்க… இவ்வளவு ஆரோக்கியம் இருக்கு…

​கிளிசரின்

samayam tamil Tamil News Spot

100 மில்லி ரோஸ் வாட்டரை ஒரு தேக்கரண்டி சுத்தமான கிளிசரினுடன் கலக்கவும். அதனை காற்று புகாத பாட்டிலில் வைக்கவும். இது எண்ணெய் மற்றும் கலவையான சருமத்தை எண்ணெயாக மாற்றாமல் ஈரப்பதமாக்க உதவுகிறது, இதை கைகள் மற்றும் கால்களிலும் தடவலாம்.

​அவகேடோ பேக்

samayam tamil Tamil News Spot

ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய், தயிர் மற்றும் தேன் சேர்த்து, 1 பழுத்த அவகேடோ பழத்தை ஒன்றாக கலக்கவும். இதனை முகத்தில் தடவி 20 முதல் 30 நிமிடங்கள் வரை படர விட்டு பின் கழுவி விடுங்கள். அவகேடோ பழங்கள் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அவை வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்களைக் கொண்டிருப்பதால் சருமத்தை பாதுகாப்பதோடு மற்றும் தோல் அமைப்பையும் மேம்படுத்துகின்றது. குறிப்பாக ஆலிவ் எண்ணெய் ஊட்டமளிப்பதோடு குளிர்காலத்தில் சருமத்தை மென்மையாக்குகிறது.

குளிர்காலத்தில் குழந்தைகளை வலுவாக்க என்னென்ன உணவுகள் அதிகம் கொடுக்கலாம்?…

​பாதாம் எண்ணெய்

samayam tamil Tamil News Spot

ஒரு தேக்கரண்டி சுத்தமான பாதாம் எண்ணெய் மற்றும் உலர்ந்த பால் பவுடருடன் அரை தேக்கரண்டி தேன் கலக்கவும். இதனை பேஸ்டாக கலந்து முகத்தில் தடவவும். சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு சாதாரண நீரில் அகற்றலாம்.

​வாழைப்பழம்

samayam tamil Tamil News Spot

வாழைப்பழத்தை நன்கு மசித்து சிறிது ரோஸ் வாட்டர் சேர்க்கவும். இதனை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவவும். வாழைப்பழம் சருமத்தை ஈரப்பதமாக்குவதோடு ஊட்டமளிக்கிறது மற்றும் இறுக்குகிறது. தளர்வான சருமத்தை இறுக்கமாக்க உதவுகிறது.

குளிர்காலத்தில் பப்பாளி பழம் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்…

​சருமத்துக்கு ஆரஞ்சு ஜூஸ்

samayam tamil Tamil News Spot

ஒரு தேக்கரண்டி ஆரஞ்சு சாறுடன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும். காரணம் தேன் அனைத்து தோல் வகைகளுக்கும் பொருந்தும். அதேபோல் எண்ணெய் பசை மற்றும் முகப்பருக்கள் உள்ள சருமத்திற்கு தயிர் மற்றும் சிறிது மஞ்சள் கலந்து சாப்பிடலாம்.

கெட்ட கொழுப்பை கரைக்க எலுமிச்சை சாறுடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிங்க…

​சருமத்துக்கு முட்டை

samayam tamil Tamil News Spot

அரைத்த பாதாம், தேன், தயிர் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு தலா ஒரு தேக்கரண்டியுடன் 3 டீஸ்பூன் சோக்கரை கலக்கி முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் சருமம் ஈரப்பதமாக இருப்பதோடு பளபளப்பாகவும் மாறும்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.