Share on Social Media


வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், சிம்பு நடித்து திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டு கொண்டிருக்கும் படம் “மாநாடு”‘. அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் சிம்பு கேரியரில் ஒரு சிறந்த பிளாக்பஸ்டர் படமாக அமைந்துள்ளது.

இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்துள்ளார். சிம்பு (Simbu) மற்றும் எஸ்.ஜே. சூர்யா (SJ Surya) நடிப்பில் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த (Maanaadu) படம் பல்வேறு பிரச்சனைகளை தாண்டி ரிலீஸ் செய்யும் நேரத்தின்போதும் பிரச்னையை சந்தித்து ஒருவழியாக திரையரங்குகளில் ரிலீசானது. ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த படம் ரிலீசான இரண்டே நாட்களில் ரூ.14 கோடி வசூல் செய்து சாதனையை படைத்துள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

ALSO READ | அரசியில் கட்சி தலைவர்களை சீண்டியதா மாநாடு திரைப்படம்?

இதற்கிடையில் இந்த படத்தை பார்த்த திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் இந்த படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

சிம்புவை அடுத்து இந்த படத்தில் நடிப்பிற்காக பாராட்டுகளை பெற்று வருபவர் எஸ்ஜே சூர்யா. அதன்படி எஸ்.ஜே.சூர்யாவின் சிறப்பான நடிப்பு இந்த படத்தை வேற லெவல் கொண்டு போய்விட்டது என்று வெங்கட்பிரபு சமீபத்தில் தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில் தற்போது நேற்று மாநாடு படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எஸ்ஜே சூர்யாவுக்கும் தொலைபேசி மூலம் ரஜினிகாந்த் தனது பாராட்டைத் பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் எஸ்.ஜே சூர்யா கூறியதாவது., இன்று எனது நடிப்பு திறமைக்காக எனக்கு மிகப்பெரிய விருது கிடைத்ததாக உணர்கிறேன். ரஜினிகாந்த் அவர்களின் அன்பான பாராட்டு இந்த திரையுலக பயணத்தை எதிர்கொள்ள பெரும் பலத்தை அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார். 

 

 

சமீபத்தில் வெளியான மாஸ்டர், கர்ணன் போன்ற படங்கள் ரிலீசான அன்றே வசூல் சாதனை செய்த நிலையில் சிம்புவின் மாநாடு படமும் அந்த சாதனையை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | ‘அந்நியன்’ பட ஹிந்தி ரீமேக்கில் ஜாக்கிசான் நடிக்கிறாரா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR 

 





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *