Share on Social Media

சிவப்பு சந்தனம், விஞ்ஞான ரீதியாக டெரோகார்பஸ் சாண்டலினஸ் எல் என்று அழைக்கப்படுகிறது. இது ஆயுர்வேத மருத்துவ முறையின் ஒரு புகழ்பெற்ற தாவரம் ஆகும். மேலும், வீக்கம், காயங்கள், தோல் பிரச்சினைகள் மற்றும் இன்னும் பல நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இது பாரம்பரியமாக பயன்படுகிறது.

இந்தியாவில், சிவப்பு சந்தனத்தை ரக்தச்சந்தன், ஹார்ட்வுட், லால் சந்தன், ரூபி வூட், அகரு, அனுகம் மற்றும் சிவப்பு சாண்டர்ஸ் என பல பெயர்களால் அறியப்படுகிறது. இந்த தாவரத்தின் மரம் ஆனது, கிளைகோசைடுகள், அத்தியாவசிய எண்ணெய்கள், ஃபிளாவனாய்டுகள் போன்ற பல பைட்டோ கெமிக்கல்களால் நிறைந்துள்ளன; மற்றும் ஃபிளாவனாய்டுகள், டானின்கள் மற்றும் பினோலிக் அமிலங்கள் போன்ற பாலிபினோலிக் கலவைகளாலும் நிறைந்துள்ளன. இந்த சேர்மங்கள் அவற்றின் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற (ஆன்டி ஆக்ஸிடன்ட்), அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகளுக்கு பெயர் பெற்றவை.

இந்த பதிவில், சிவப்பு சந்தனத்தின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் பற்றி நாங்கள் பகிர்ந்துள்ளோம். அவற்றை தவறாமல் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

​தலைவலிக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது

தலைவலிக்கு சிகிச்சையளிக்க அல்லது அதனை சமாளிக்க சிவப்பு சந்தன பேஸ்ட் ஆனது ஒரு குளிரூட்டும் முகவராக (வெளிப்புறமாக) பயன்படுத்தப்படுகிறது. இந்த பேஸ்டை நெற்றியில் தடவும் போது, அது மனதை நிதானப்படுத்தி அமைதிப்படுத்தும்; வழக்கமாக, உடலின் பிட்டாவை (பிட்டா என்பது வெப்பம், நெருப்பு மற்றும் ஆற்றலைக் குறிக்கிறது) சமநிலைப்படுத்துவதன் இது மூலம் நிகழ்கிறது. மேலும், அதன் ஏற்றத்தாழ்வே தலைவலிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

​இது காயங்களை குணப்படுத்துகிறது

samayam tamil Tamil News Spot

சிவப்பு சந்தன மரங்களில் இருந்து எடுக்கப்படும் சந்தனக்கட்டை ஆனது, காயத்தை குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. நீரிழிவு சிக்கல்களால் ஏற்படும் கடுமையான காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் சிவப்பு சந்தனம் தான் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இந்த மரத்தின் ஆஞ்சியோஜெனெசிஸ் செயல்பாடு, புதிய இரத்த நாளங்கள் மற்றும் தோல் செல்களை உருவாக்க உதவுகிறது. இதன்மூலம் காயங்கள் விரைவான விகிதத்தில் குணமாகும்.

​நல்ல சரும ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது

samayam tamil Tamil News Spot

சிவப்பு சந்தனத்தின் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு, ஆஸ்ட்ரிஜென்ட் மற்றும் ஆக்ஸிஜனேற்ற விளைவுகள் ஆனது, சொரியாசிஸ், பதனிடப்பட்ட தோல், எண்ணெய் சருமம், ஹைப்பர் பிக்மென்டேஷன், முகப்பரு, பருக்கள் மற்றும் விரைவில் வயதானவர் போல் தோற்றமளிப்பது, போன்ற பல தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. கிட்டத்தட்ட அனைத்து தோல் பிரச்சினைகளுக்கும் இது ஒரு சிறந்த மூலிகையாக திகழ்கிறது.

மேற்கூறிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண, சிவப்பு சந்தனப் பொடியை எலுமிச்சை சாறு, தயிர் மற்றும் எண்ணெய் போன்ற பொருட்களுடன் கலந்து அதனை தோலில் தடவி வரலாம்.

​கொழுப்பைக் குறைக்க உதவுகிறது

samayam tamil Tamil News Spot

சிவப்பு சந்தனம் ஆனது, லிப்பிட் அல்லது கொழுப்பைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த மரத்தின் பட்டை ஆனது, உடலில் உள்ள மொத்த மற்றும் கெட்ட கொழுப்பை (எல்.டி.எல்) குறைக்க உதவுகிறது; மற்றும் எச்.டி.எல் அல்லது நல்ல கொழுப்பை உருவாக்குகிறது. சிவப்பு சந்தனத்தில் ஸ்டெரோஸ்டில்பீன், ஜென்டிசிக் அமிலம், 3-ஹைட்ராக்ஸிபென்சோயிக் அமிலம், ஆல்பா மற்றும் பீட்டா ரெசோர்சிலிக் அமிலம் மற்றும் வெண்ணிலிக் அமிலம் இருப்பதால் இது ஏற்படுகிறது.

​பாலுணர்வாக செயல்படுகிறது

samayam tamil Tamil News Spot

பாலுணர்வு என்பது பாலியல் ஆசை, பாலியல் நடத்தை மற்றும் பாலியல் இன்பத்தை அதிகரிக்க பயன்படும் பொருட்கள் ஆகும். சிவப்பு சந்தனம் ஆனது, ஒரு இயற்கையான பாலுணர்வாகக் கருதப்படுகிறது. இது பிறப்புறுப்புகளில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலமும், மனநிலையை அதிகரிப்பதன் மூலமும், நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவதன் மூலமும் ஒரு நபரின் பாலுணர்வை மேம்படுத்த உதவுகிறது.

​வயிற்றுப் புண்களைத் தடுக்கிறது

samayam tamil Tamil News Spot

சிவப்பு சந்தனத்தின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் வயிற்று செல்கள் சேதமடைவதைத் தடுக்க உதவும், இதனால் வயிற்றுப் புண் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கலாம். ஐபியூபுரொஃபென் மருந்தால் தூண்டப்பட்ட புண்களால் ஏற்படும் சேதங்களுக்கு எதிராக சிவப்பு சந்தனம் ஆனது, காஸ்ட்ரோப்ரோடக்டிவ் விளைவுகளைக் கொண்டுள்ளது என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. இது இரைப்பைப் புண்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், உயிரணு செயல்பாடுகளை பராமரிப்பதிலும், மற்றும் புண்களை ஏற்படுத்தும் முகவர்களுக்கு எதிராக குடல் சளிச்சுரப்பியின் ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும் இது உதவுகிறது.

​நீரிழிவு நோயை நிர்வகிக்கிறது

samayam tamil Tamil News Spot

சிவப்பு சந்தனத்தில் உள்ள பாலிபினால்கள், உடலில் உள்ள குளுக்கோஸின் அளவைக் குறைக்கவும், இன்சுலினின் சுரப்பை மேம்படுத்தவும் உதவுகிறது.

சிவப்பு சந்தனத்தில் துத்தநாகம் அதிக அளவில் இருக்கின்றது. மேலும், இதன் நீரிழிவு எதிர்ப்பு விளைவு காரணமாக, இன்சுலின் தொகுப்பு, சுரப்பு மற்றும் சேமிப்பில், சிவப்பு சந்தனம் முக்கிய பங்கு வகிக்கும் என்று ஒரு ஆய்வு காட்டுகிறது.

8

8

​கல்லீரல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கிறது

samayam tamil Tamil News Spot

ஃப்ரீ ரேடிக்கல்கள் காரணமாக ஏற்படும் பல்வேறு கல்லீரல் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு சிவப்பு சந்தனத்தை நீங்கள் பயன்படுத்தலாம். சிவப்பு சந்தன மரத்தின் பட்டைகளில் உள்ள டானின்கள் மற்றும் பினோலிக் அமிலங்கள் போன்ற ஃபிளாவனாய்டுகள் ஃப்ரீ ரேடிக்கல்களைத் அகற்றி அவற்றைப் பாதுகாக்க உதவுகின்றன.

​இருமலுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது

samayam tamil Tamil News Spot

இருமல் ஆனது, நோய்க்கிருமிகள் காரணமாக சுவாசக்குழாய்களில் ஏற்படும் அழற்சியால் ஏற்படுகிறது. சிவப்பு சந்தனத்தின் ஆன்டி- மைக்ரோபியல் பண்புகள் நோய்க்கிருமிகளைக் கொல்ல உதவுகின்றன; மற்றும் அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தைக் குறைக்கின்றன. இதனால் இருமல், தொண்டை புண் மற்றும் சளி ஆகியவற்றை இது நிர்வகிக்கிறது.

​வேதியியல் தடுப்பு விளைவைக் கொண்டுள்ளது

samayam tamil Tamil News Spot

சிவப்பு சந்தனத்தில் உள்ள பினோலிக் அமிலங்கள், ஃபிளாவனாய்டுகள், ஸ்டில்பென்கள் மற்றும் லிக்னான்கள் போன்ற இயற்கை பாலிபினால்கள் புற்றுநோய், வீக்கம், உயிரணு பெருக்கம், கதிர்வீச்சு மற்றும் மெட்டாஸ்டாஸிஸ் தொடர்பான பல பாதைகளை குறிவைக்க உதவுகிறது. இவை அனைத்தும் புற்றுநோய் உருவாக்கம் தொடர்பானது. ஒரு ஆய்வின்படி, சிவப்பு சந்தனத்திலிருந்து எடுக்கப்படும் ஸ்டெரோலினஸ் கே மற்றும் ஸ்டெரோலினஸ் எல் ஆகியவை புற்றுநோய்க்கு எதிரான பண்புகளைக் கொண்டுள்ளன. மேலும் மார்பக, பெருங்குடல், கணையம் மற்றும் புரோஸ்டேட் போன்ற புற்றுநோய் வகைகளின் அபாயத்தைக் குறைக்கவும் இது உதவுகிறது.

​சிவப்பு சந்தனத்தை எவ்வாறு பயன்படுத்துவது?

samayam tamil Tamil News Spot

– பல்வேறு தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க, சிவப்பு சந்தன பொடியை எலுமிச்சை சாறு, ரோஸ் வாட்டர், மஞ்சள் மற்றும் எண்ணெய்கள் போன்ற பொருட்களுடன் கலந்து அவற்றை முகத்தில் தடவி வரலாம். இதன் பயன்பாட்டிற்கு முன் மருத்துவ பயிற்சியாளரை அணுகுவது நல்லது.

– இந்த சந்தனத்தில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், வீட்டில் நறுமண சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.

– சிவப்பு சந்தன எண்ணெயை சருமத்தில் நேரடியாகப் பயன்படுத்தலாம் அல்லது ஏதேனும் லோஷனுடன் கலந்தும் பயன்படுத்தலாம். மேலும், குளிக்கும் போது அல்லது அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர்களிலும் இதை பயன்படுத்தப்படலாம்.

– செரிமானத்தை மேம்படுத்துவதற்காக சிவப்பு சந்தன பொடி ஆனது, தேனுடன் கலந்து உணவுக்கு முன் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

– எடிமாவைக் குறைக்க, இந்த சந்தன பொடி தண்ணீரில் கலந்து வீங்கிய இடங்களில் தடவப்படுகிறது.

– சளி மற்றும் வயிற்றுப்போக்குக்கு சிகிச்சையளிக்க, சிவப்பு சந்தன பழம் கொண்டு டிகாஷன் தயார் செய்யப்படுகிறது,

​மருத்துவ ஆலோசனை

samayam tamil Tamil News Spot

சிலருக்கு, சிவப்பு சந்தனத்தை சருமத்தில் நேரடியாகப் பயன்படுத்துவதால் ஒவ்வாமை ஏற்படலாம், எனவே, இதனை பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் அல்லது எந்தவொரு நாள்பட்ட கோளாறுக்கும் இந்த சிவப்பு சந்தன பொடியை நீங்கள் எடுத்துக்கொண்டால், இதனை பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவ நிபுணரை அணுகவும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *