Share on Social Media


கோலமாவு கோகிலா என்ற வெற்றிப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான நெல்சன் அடுத்ததாக சிவகார்த்திகேயை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார்.  ஓடிடியா திரையரங்கா என்ற குழப்பத்தில் இருந்த இத்திரைப்படம் ஒரு வழியாக என்று திரையரங்கில் வெளியானது.  நீண்ட நாட்களுக்கு பின் வரும் சிவகார்த்திகேயன் படம் என்பதால் அவரது ரசிகர்களும், தங்களது அடுத்த படத்தின் இயக்குனர் என்று விஜய் ரசிகர்களும் ஆவலோடு காத்திருந்தனர்.  இவர்களின் காத்திருப்புக்கு ஏமாற்றம் அளிக்காத வகையில் டாக்டர் திரைப்படம் அமைந்துள்ளது.  

காமெடி ஹீரோவாக தொடங்கி ஆக்சன் ஹீரோவாக தன்னை மாற்றி கொண்டு வரும் சிவகார்த்திகேயனை வேறு ஒரு கோணத்தில் காட்டக் கூடிய படமாக உள்ளது டாக்டர்.  எந்தவித ஆரவாரமும் இன்றி அமைதியாக சமத்து பையனாக காணப்படுகிறார் சிவா.  முதல் இரண்டு கியரில் வண்டி மெதுவாக செல்வது போல படம் ஆரம்பித்து ஒரு அரைமணி நேரம் மெதுவாகவே நகர்கிறது.  

அதன்பின் டாப் கியரில் செல்லும் படம் எங்கேயும் நிற்கவில்லை.  டாக்டர் திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோவாக ரவி மற்றும் யோகி பாபுவை கூறலாம்.  இவர்களது ஒன்லைனில் திரையரங்கமே அதிர்கிறது.  இரண்டாம் பாதியில் வரும் வில்லன் வினய் அதிரடி வில்லனாக இல்லாமல் அமைதியான வில்லனாக காணப்படுகிறார்.   பிரியங்கா மோகனுக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும்.    அருண் அலெக்சாண்டர், தீபா, இளவரசு போன்றோர் காமெடியில் அசத்தி உள்ளனர். அனிருத்தின் பின்னணி இசை ஒவ்வொரு சீனையும் அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்கிறது.  செல்லம்மா பாடல் யூ டியூபில் வெளியாகி பல சாதனைகளை படைக்க உள்ளது.  

doc

என்னை தவிர வேறு யாரும் இதுபோல் ஒரு கதையை எழுதி இயக்கி விட முடியாது என்று மார்தட்டி சொல்லும் அளவிற்கு நெல்சன் இப்படத்திற்கு உழைத்துள்ளார்.  தனது முந்தைய படத்தை போலவே டார்க் காமெடி ஜானரில் கலக்கி இருக்கிறார் நெல்சன்.  சீமராஜாவில் தனக்கு மட்டுமே கதையில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தவறை சிவா, டாக்டர் படத்தில் அதனை திருத்திக் கொண்டு ஒவ்வொருவருக்கும் ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுத்துள்ளார்.  குறிப்பாக மெட்ரோ பைட் சீன் மற்றும் இடைவேளைக்கு முன்பு வரும் காட்சிகள் பிரமாதம்.  மொத்தத்தில் இந்த டாக்டர் வசூல் மழையில் புது மருத்துவமனையே கட்டிவிடலாம்!

ALSO READ Doctor Review: வெளியானது டாக்டர்; Twitter விமர்சனம் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *