Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • மாநாடு வெற்றியால் சிம்பு மகிழ்ச்சி
  • பார்ட்டிக்கு ‘நோ’ சொன்ன சிம்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் நவம்பர் 25ம் தேதி வெளியாகி ஹிட்டாகியிருக்கிறது. படம் சிம்பு ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்கும் பிடித்திருக்கிறது.

திரையுலகினரும், ரசிகர்களும் மாநாடு படத்தை சமூக வலைதளங்களில் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். பிரமாண்டத்திற்கு பெயர் போன இயக்குநர் ஷங்கர் கூட மாநாடு படத்தை பார்த்து இம்பிரஸாகி ட்வீட் செய்திருக்கிறார்.

மாநாடு படம் ஹிட்டானதும் வெங்கட் பிரபு பார்ட்டி கொடுத்திருப்பாரே, ஜமாய்ச்சீங்களா என சிம்புவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ இனி நான் பார்ட்டிகளில் கலந்து கொள்ளவே மாட்டேன் என்றார். பார்ட்டிகளுக்கு சென்று மது அருந்தியது எல்லாம் ஒரு வயசு. இனிமேல் பார்ட்டிகளுக்கு செல்ல மாட்டேன் என்று மேலும் தெரிவித்தார்.

மாநாடு படத்திற்காக சிம்பு தன் உடல் எடையை வெகுவாக குறைத்துவிட்டார். பார்க்க அங்கிள் மாதிரி இருக்கிறார், குனிந்து சாப்பிட முடியவில்லை, சிம்புவின் கெரியர் காலி என்று பலரும் பேசிய நேரத்தில் எடையை குறைத்து வியக்க வைத்தார்.

ஒல்லியான பிறகு சைவத்திற்கு மாறிவிட்டார் சிம்பு. மேலும் மது அருந்துவதையும் நிறுத்திவிட்டார். இந்நிலையில் தான் பார்ட்டிகளுக்கு இனி செல்ல மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
கிண்டல் செய்த பையனை சப்புனு அறைந்த சோனியா அகர்வால்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *