Share on Social Media


ஈஸ்வரன் திரைப்படத்திற்கு பிறகு சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்துள்ளார் நடிகர் சிம்பு. நீண்ட காலமாகவே இந்த திரைப்படத்திற்காக வெறித்தனமாக காத்து கொண்டிருக்கின்றனர் சிம்பு ரசிகர்கள். இந்நிலையில் மாநாடு திரைப்படம் குறித்து, படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு சில சுவாரஸ்யமான தகவலை ட்விட்டர் ஸ்பேஸ் நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான கல்யாணி ‘மாநாடு’ திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் மற்றும் கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் இந்தப்படத்தின் ‘மெர்ஸைலா’ என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது. இந்தப் பாடலை யுவனும், அவரது சகோதரி பவதாரணியும் இணைந்து பாடியுள்ளனர். பாடல் வெளியீட்டின் போது மாநாடு படக்குழுவினர் ட்விட்டர் ஸ்பேஸ் நிகழ்ச்சியில் கலந்து படம் குறித்து தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது பேசிய படத்தின் இயக்குனர், ‘சின்னப்பசங்களை வைத்து படம் இயக்கிய சமயத்தில் யுவன் தான் என் படங்களின் ஹீரோவாக இருந்தார். யுவன் என் படங்களுக்குத்தான் பெஸ்ட்டான பாடல்களை தருவார் என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் அவருக்கு செல்வா தான் பர்ஸ்ட். அந்த விஷயத்தில் எனக்கு கொஞ்சம் பொறாமை கூட உண்டு.

எதிர்மறை விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ‘ஜகமே தந்திரம்’ திரைப்பட தயாரிப்பாளர்!
எப்படி இளையராஜா-வைரமுத்து கூட்டணி மிகப்பெரிய புகழ்பெற்றதோ, அதேபோல அவர்களது வாரிசுகளான யுவனையும் மதன் கார்க்கியையும் எனது படத்தின் மூலமாகத்தான் ஒன்று சேர்க்கவேண்டும் என நினைத்து ‘பிரியாணி’ படம் மூலம் அதை சாதித்தேன். இதோ இந்தப்படத்திலும் இந்த ‘மெர்ஸைலா’ பாடலில் அவர்கள் இணைந்திருப்பதில் சந்தோசம் தான்.. மதன் கார்க்கியின் வார்த்தைகளில் அவரது தந்தை வைரமுத்துவின் சாயலை விட கவிஞர் வாலியின் சாயல் தான் எனக்கு தெரிகிறது.

என்னோட கேரியர்ல மங்காத்தாவை விட இது பெரிய ப்ராஜெக்ட்.. இந்தப்படம் அரசியல் படம் என்றாலும் புதுசா ஒரு ஜானர்ல முயற்சி பண்ணிருக்கேன். எனக்கு தெரிஞ்ச ஜானர்ல அரசியலை இதுல சொல்லிருக்கிறேன்.. அதனால் மக்கள் எதிர்பார்க்கிற படமாகவும் அவர்கள் எதிர்பாராத ஒரு படமாகவும் இந்த மாநாடு இருக்கும். பரிசோதனை முயற்சியிலான இதுபோன்ற திரைக்கதையில நடிக்க சிம்பு ஒத்துக்கிட்டது பெரிய விஷயம். அவரோட ரசிகர்களுக்கும் இந்தப்படம் ரொம்ப புடிக்கும். விண்ணை தாண்டி வருவாயா படத்துல கௌதம் மேனன் புது எஸ்டிஆரை காட்டிய மாதிரி நானும் இந்த மாநாடு படத்துல புது எஸ்டிஆரை காட்டணும்னு நினைச்சேன்

சிம்பு எஸ்ஜே சூர்யா இருவருக்குமான பேஸ் ஆப் தான் படமே. எஸ்ஜே சூர்யா கேரக்டர் பட்டி தொட்டியெல்லாம் படத்தை கொண்டுபோய் சேர்க்கும். ஸ்டண்ட் சில்வா மாஸ்டர் செகன்ட் யூனிட் டைரக்டர் மாதிரி வேலை பார்த்திருக்கார். ஒரு காட்சில கிட்டத்தட்ட நான்காயிரம் பேரை வச்சு மாநாடு மாதிரி ஒரு காட்சியை படமாக்குனோம். இந்த காட்சியோட பிரம்மாண்டத்தை தியேட்டர் ஸ்கிரீன்ல பார்த்தா தான் நல்லா இருக்கும். சிம்புவே படத்தை பார்த்துட்டு படம் புரியுதுப்பா’ன்னு சொல்லிட்டாரு. அந்தவகையில் மாநாடு தியேட்டருக்கான படம்’ என்று குறிப்பிட்டுள்ளார் வெங்கட் பிரபு.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *