Share on Social Media


சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மாநாடு‘. கடந்த பொங்கலுக்கு சிம்பு நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன்’ படத்திற்கு பிறகு நீண்ட காலமாக இந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் கடந்த மாதம் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது.

‘மாநாடு’ படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா மற்றும் கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

‘மாநாடு’ படம் சிம்புவின் கம்பேக் படமாக அமைந்துள்ளது. அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாசிட்டிவ்வான விமர்சனங்களையே பெற்று வருகிறது இந்தப்படம். ‘மாநாடு’ படம் வெளியாகி 3 நாட்களில் 22 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார். பிரபலங்களின் பாராட்டு மழையிலும் ‘மாநாடு’ படம் நனைந்து வருகிறது.

என் உடல் நுகர்பொருள் அல்ல: வைரலாகும் ஃபரா ஷிப்லா நீச்சல் உடை போட்டோ ஷூட்!
திரையரங்கில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடித்த சிங்கிள் டேக் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

எஸ்.ஜே. சூர்யாவிடம் தன்னை கொல்ல சொல்லி சிம்பு நடித்த அந்த காட்சிக்கு திரையரங்கிலும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த மேக்கிங் காட்சியை பார்த்த ரசிகர்கள் சிம்புவை ‘பிறவி கலைஞன்’, ‘மகா நடிகன்’ என எமோஷனலாக பாராட்டி வருகின்றனர். இந்த மேக்கிங் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நம்ம நடிகர்களை வைத்து Hollywood படம் பண்ணலாம் – இயக்குனர் ராஜமௌலி



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *