Share on Social Media


மாநாடு‘ சிம்புவின் மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்துள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இந்தப்படத்தின் ரிலீசுக்காக வெகு நாட்களாக ரசிகர்கள் காத்திருந்தினர். பலவித தடைகளுக்கு மத்தியில் கடந்த மாதம் நவம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்தப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது.

‘மாநாடு’ படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா மற்றும் கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா படத்தின் ரிலீசுக்கு முன்பாக சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிம்பு கண்ணீருடன், ‘நெறைய பிரச்சனை கொடுக்குறாங்க. அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். என்னை மட்டும் நீங்க பார்த்துகோங்க’ என பேசியது ரசிகர்கள் அனைவரையும் கலங்க வைத்தது. ரிலீசுக்கு முன்புவரை பிரச்சனைகளில் சிக்கிய ‘மாநாடு’ ஒரு வழியாக திட்டமிட்டபடி கடந்த மாதம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியானது.

என்னவொரு வில்லத்தனமான சிரிப்பு: ‘மகான்’ டப்பிங் பணியை நிறைவு செய்த விக்ரம் – துருவ்!
இந்நிலையில் இந்தப்படத்திற்கான ஒரு கலந்துரையாடலில் சிம்பு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்த போது வில்லன்களை துரத்தும் காட்சியில் ஓட முடியாமல் கஷ்டப்பட்டதாகவும், ஷுட் முடிந்த பின்பு கால் எல்லாம் வீங்கியதாகவும், இதனை நினைத்து நிறைய அழுததாகவும் சிம்பு தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் ‘மாநாடு’ படத்தில் ஏர்போர்ட்டில் ஓடும் சீனில் தனது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் காரில் வைத்து அந்த காட்சியை படமாக்கியதாகவும் சிம்பு தெரிவித்துள்ளார். ‘யார் என்ன சொன்னாலும் நம்மால முடியும்ன்னு நம்ம நம்பனும்’ என சிம்பு பேசியுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

நன்றி தெரிவித்த மாநாடு பட குழுவினர்!



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *