Share on Social Media


ப்ரீ டயாபட்டீஸ் அல்லது முன் நீரிழிவு நோய் என்பது என்னவென்றால் இரத்த சர்க்கரை அளவு உயர்ந்து இருப்பதையே அறிய முடியாது. இதனை நீங்கள் கண்டறியாவிட்டால் அது தொடங்கிய ஐந்து முதல் 10 ஆண்டுகளுக்குள் டைப் 2 நீரிழிவு நோயாக மாறிவிடும். ப்ரீ-டையாபட்டீஸின் அறிகுறிகள் என்ன என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

​ப்ரீ டயாபட்டீஸ் உள்ளதை கண்டறிவது எப்படி?

ப்ரீ டயாபட்டீஸ் நிலையில் உள்ளவர்கள் பெரும்பாலும் இதைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். நீரிழிவு நோயைப் போலவே, ப்ரீடையாபட்டீஸும் அமைதியான எந்தவித அறிகுறிகளையும் காட்டாது. பெரும்பாலான நேரங்களில் இரத்தப் பரிசோதனை செய்யும்போது தான் இது கண்டறியப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், நம் நாட்டில் ப்ரீ டயாபட்டீஸ் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஏற்கனவே 90 மில்லியன் மக்கள் முன் நீரிழிவு நோயுடன் தான் உள்ளனர். அவர்களில் 70 சதவீதம் பேர் அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளில் டைப் 2 நீரிழிவு நோயாளிகளாக மாறுவார்கள் என்று கணிக்கப்படுகிறது.

​ப்ரீ டயாபட்டீஸ் அறிகுறிகள்

samayam tamil Tamil News Spot

ப்ரீ டயாபட்டீஸ் அறிகுறிகள் பெரும்பாலும் கண்டறியப்பட முடியாமல் போகும். இதனால் அதற்குரிய சிகிச்சை மேற்கொள்ளப்படாது. இதனால், இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் சேதமடையும். இதனைத் தொடர்ந்து, ப்ரீ டயாபட்டீஸால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

கடைசியில் இது டைப் 2 நீரிழிவு நோயாக உருமாறும். கீழே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் இருப்பின் அவை ப்ரீ டயாபட்டீஸின் அறிகுறிகள் ஆகும். அவை என்னவெனில்,

 • மங்கலான பார்வை
 • வாய் வறண்டு போவது
 • அதிக தாகம் எடுப்பது
 • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
 • சிறுநீர் பாதை நோய்த்தொற்று
 • எரிச்சல், பதட்டம்
 • தோல் அரிப்பு
 • கூச்ச உணர்வு, உணர்வின்மை, மூட்டுகளில் வலி அல்லது எரிவது போன்ற விசித்திரமான உணர்வுகள்
 • சருமத்தில் தடித்த மற்றும் கருமையான திட்டுகள் (அக்குள், கழுத்து மற்றும் முழங்கைகளில்)
 • எடை இழப்பு
 • சோர்வு
 • காயங்கள் ஆற நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்வது.

tips for warts: வலியில்லாமல் மரு உதிரணுமா? இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க…

​ப்ரீ- டையாபட்டீஸ் விழிப்புணர்வு

samayam tamil Tamil News Spot

இந்தியாவில் சிறந்த மருத்துவர்கள், ஆய்வு நிபுணர்கள், ஆய்வகங்கள் இணைந்து #FightPrediabetes பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் இந்தியாவின் முதல் 10 நகரங்களில் இருந்து சுமார் 5000 பேர் இந்த சோதனையில் கலந்து கொண்டனர். அவர்களின் உடல்நலம், நீரிழிவு நோயின் குடும்ப வரலாறு, வாழ்க்கை முறை குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளன. அவை என்னவெனில்,

இந்தியாவில் 40 வயதுக்குட்பட்ட 3 பேரில் 2 பேர் ப்ரீ டயாபட்டீஸ் அபாயத்தில் இருப்பதாக கணக்கெடுப்பு கூறுகிறது.

40 வயதிற்குட்பட்டவர்களில் 6 சதவீதம் பேருக்கு ப்ரீ டயாபட்டீஸ் வருவதற்கான ஆபத்து உள்ளது. இதில் பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்கள் 1.5 மடங்கு அதிக ஆபத்தில் உள்ளனர்.

இதில் 6 சதவீதம் பேருக்கு உயர் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், இந்த சோதனையின் முடிவில் 74 சதவீதம் பேர் உடல் பருமன் அல்லது அதிக எடை கொண்டவர்களாக உள்ளனர். 59 சதவீதம் பேர் நீரிழிவு நோய்க்கான குடும்ப வரலாற்றைக் கொண்டிருந்தனர்.

Thirikadugu: உடலில் நோயை அண்டவிடாமல் தடுக்கும் திரிகடுகு சூரணம்… செய்முறையும் சாப்பிடும் முறையும்

​ப்ரீ டயாபட்டீஸ் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ?

samayam tamil Tamil News Spot

நீங்கள் ப்ரீ- டையாபட்டீஸால் பாதிக்கப்பட்டவர் எனில், கீழ்கண்ட சில விஷயங்களை பின்பற்ற வேண்டும்.

உங்கள் உடல் எடையில் 5 முதல் 10 சதவிகிதம்வரை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.

புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களை நிறுத்த வேண்டும்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களுக்கு மாற வேண்டும்.

கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை எடுத்துக் கொள்வதைக் குறைக்கவும்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *