Share on Social Media



அக்ரூட் பருப்புகள் ஆக்ஸிஜனேற்றம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் வளமான ஆதாரங்களில் ஒன்று. எனினும் எல்லா நேரங்களிலும் இவை நன்மைகளை மட்டுமே அளித்துவிடாது. உணவுகளை போலவே இந்த அக்ரூட் பருப்புகளும் பாதகமான விளைவுகளை உண்டாக்கும். அதன் விளைவுகள் என்ன ஆய்வுகள் என்ன சொல்கிறது என்பதை இதில் பார்க்கலாம்.

​செரிமான பிரச்சனைகள் உண்டாக்கலாம்

கொட்டைகளில் உள்ள நார்ச்சத்து அதிகமாக எடுத்துகொண்டால் அவை இரைப்பை குடல் பிரச்சனைகளை உண்டாக்கலாம். இது செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் என்றாலும் சில நேரங்களில் அவை சிக்கலை மோசமாக்கலாம். செரிமான பிரச்சனைகள் இருந்தால் வால்நட் எடுப்பதற்கு முன்பு மருத்துவரை அணுகி ஆலோசிக்கவும்.

அக்ரூட் பருப்புகள் மற்ற பொதுவான செரிமான பக்கவிளைவுகளில் வீக்கம், வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை கொண்டிருக்கும். இது குறித்த ஆய்வில் ஒரு சில பங்கேற்பாளர்கள் வயிற்று உப்புசம் உட்பட பல்வேறு வகையான இரைப்பை குடல் துயரங்களை கொண்டிருந்ததாக தெரிவித்தார்கள்.

retinopathy: சுகர் கரெக்டா இருந்தாலும் கண் கோளாறு வரும், எப்படி தவிர்ப்பது மருத்துவர் சொல்வது என்ன?

1 அவுன்ஸ் வால்நட்களை அதிகமாக எடுத்துகொள்வது இந்த ஆபத்தை உண்டாக்கலாம். அக்ரூட் பருப்பில் இருக்கும் அதிக நார்ச்சத்து மற்றும் அதிக கொழுப்பு இதற்கு காரணம். 30 கிராம் அக்ரூட் பருப்பில் 2 கிராம் நார்ச்சத்து மற்றும் 20 கிராம் கொழுப்பு உள்ளது.

​அலர்ஜியை உண்டாக்கலாம்

samayam tamil Tamil News Spot

மரக்கொட்டைகள் பொதுவாகவே ஒவ்வாமையை உண்டாக்க கூடியவை. இது குமட்டல், மூச்சுத்திணறல், விழுங்குவதில் சிரமம், வாய் தொண்டை அல்லது கண்களில் அரிப்பு மற்றும் நாசி நெரிசல் ஆகியவற்றை உண்டாக்கலாம்.

ஆபத்தான ஒவ்வாமை எதிர்வினை அனாபாலிக்ஸிஸ் ஆகும். இது சுவாசத்தை பாதிக்கிறது மற்றும் உடலை அதிர்ச்சி நிலைக்கு ஆளாக்குகிறது. அக்ரூட் பருப்புகளுடன் முதன்மை அல்லது இரண்டாம் நிலை ஒவ்வாமையை அனுபவிக்கலாம். முதன்மை ஒவ்வாமைகளில் அக்ரூட் பருப்புகள் அல்லது அவற்றின் தயாரிப்புகளை நேரடியாக எடுத்துகொள்வது ஆகும். இது அனாபிலாக்ஸிஸ்க்கு வழிவகுக்கும்.

இரண்டாம் நிலை ஒவ்வாமை என்பது மகரந்தத்தை உள்ளடக்கியது. இது குறுக்கு வினைத்திறன் காரணமாக அக்ரூட் பருப்புகளுடன் வினைபுரிகிறது. மகரந்தம் மற்றும் வால்நட்களில் உள்ள புரதங்களின் தன்மையில் உள்ள ஒற்றுமையே இதற்கு காரணம். இந்த ஒவ்வாமை என்பது வாயில் அரிப்பு அல்லது வீக்கத்தை உண்டாக்கும்.

அக்ரூட்பருப்புகள் ஒவ்வாமை என்றால் மற்ற கொட்டைகளும் உங்களுக்கு ஒவ்வாமை என்று நினைக்க வேண்டாம். அக்ரூட் பருப்புகள் வேறு மரக்கொட்டைகள் எடுப்பதற்கு முன்பு உங்களுக்கு ஒவ்வாமை அறிகுறி இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசிப்பது நல்லது.

​எடை அதிகரிக்கலாம்

samayam tamil Tamil News Spot

அக்ரூட் பருப்புகள் நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரங்கள் மற்றும் எடை இழப்புக்கு உதவும் ஆனா அவற்றில் அதிக கலோரிகள் உள்ளன.

ஏழு அக்ரூட் பருப்புகள் சுமார் 183 கலோரிகள் அவற்றை அதிகமாக சாப்பிடுவது நிச்சயமாக அதிக கலோரிகளை குறிக்கும் இறுதியில் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

அக்ரூட் பருப்புகளுடன் கூடிய உணவு தினசரி அதிக ஆற்றல் உட்கொள்ளலுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன இது குறிப்பிடத்தக்கதாக இல்லாவிட்டாலும் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும்.

4 அவுன்ஸ் வால்நட்ஸில் 740 கலோரிகளுக்கு மேல் இருப்பதால், கொட்டைகளை தாங்களாகவே சாப்பிடுவதற்கு பதிலாக வால் நட்ஸ் உடன் உணவை எடுக்கலாம்.

அவை புரதத்தின் வளமான ஆதாரங்கள் என்றாலும், சிறந்த புரத மூலங்களை வால்நட்ஸ் உடன் மாற்ற முடியாது. கொட்டைகள் பொதுவாக முழுமையான அமினோ அமில விலங்கு புரதங்களுடன் இணைக்கப்பட வேண்டும்.

அதிக அக்ரூட் பருப்புகள் சாப்பிடுவது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்காது என்று சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.அதே போன்று மூளை பகுதியை அக்ரூட் பருப்புகள் செயல்படுத்தப்படுத்தக்கூடும் என்றும் மற்ற ஆராய்ச்சி கூறுகிறது. இதன் பொருள் அக்ரூட் பருப்புகள் மக்கள் தங்கள் பசியின் மீது சிறந்த கட்டுப்பாட்டை வைத்திருக்க உதவும்.

கலவையான கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் வால்நட்களை எடுத்துகொள்வது குறித்து மருத்துவரிடம் பேச வேண்டும்.

​குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல்

samayam tamil Tamil News Spot

குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். ஏறக்குறைய அனைத்து கொட்டைகள் ( மற்றும் உறுதியான பெரும்பாலான உணவுகள்) குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயத்தை கொண்டுள்ளன. வால்நட் சாப்பிடும் போது உடைத்து பாதுகாப்பாக விழுங்குவது கடினமாக இருக்கும். அதற்கு பதிலாக காற்றுப்பாதைகளில் அவை சிக்கிகொள்ளலாம்.

அக்ரூட் பருப்புகள் மற்ற கொட்டைகளை விட அளவில் பெரியதாக இருப்பதால் அவை அதிக ஆபத்தை உண்டாக்ககூடும். குழந்தைக்கு 7 வயதுக்குட்பட்டவராக இருந்தால் முழு நட்ஸ் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு மூச்சித்திணறல் உண்டாகலாம்.

​அல்சரை அதிகரிக்கலாம்

samayam tamil Tamil News Spot

அக்ரூட் பருப்புகள் உள்ளிட்ட கொட்டைகள் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவை எளிதில் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு புண்களை அதிகரிக்கலாம். இருப்பினும் இதை நிரூபிக்க கூடுதல் ஆராய்ச்சி தேவை.

கொட்டைகளை போலவே அக்ரூட் பருப்புகளும் ஆரோக்கியமானவை. ஒரு பெரிய ஆராய்ச்சி அமைப்பு அவற்றின் புற்றுநோய் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, கார்டியோ மற்றும் நரம்பியல் பண்புகளை எடுத்துக்காட்டுகிறது. இதன் பக்கவிளைவுகள் கவனத்தில் எடுத்து மிதமான பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

நாள் ஒன்றுக்கு எத்தனை முறை வால்நட் சாப்பிடலாம்?

samayam tamil Tamil News Spot

அக்ரூட் பருப்புகள் சிறந்த அளவு என்பது குறித்து நிரூபிக்கப்பட்ட ஆய்வு இல்லை. ஆனால் ஒரு அவுன்ஸ் கொட்டைகள் ( 7 முழு அக்ரூட் பருப்புகள்) ஒரு நாளைக்கு உணவின் ஒரு பகுதியாக மாற்றலாம். மற்றும் அதிகமாக எடுக்க கூடாது.

அன்றாட உணவில் அக்ரூட் பருப்பை முக்கியபகுதியாக மாற்றுவது முக்கியம். கொட்டைகள் சிறந்த நன்மைகள். ஆனால் மருத்துவ நிலைமைகள் ஏதேனும் இருந்தால் மருத்துவரை அணுகவும்.

papaya leaf juice : டெங்குவுக்கு மருந்தாகும் பப்பாளி இலைச்சாற்றின் வேறு நன்மைகள் என்ன? எப்படி தயாரிப்பது?

அக்ரூட் பருப்புகளை ஊறவைத்து எடுக்க வேண்டும். அக்ரூட் பருப்புகள் மற்றும் பிற கொட்டைகளில் பைட்டேட்டுகள் உள்ளன. இவை சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை தடுக்கும் இயற்கை கலவைகள். அக்ரூட் பருப்புகள் ஊறவைப்பது அதன் பைடேட் உள்ளடக்கத்தை குறைக்க உதவுகிறது. மேலும் அவை அனைத்தையும் சத்தானதாக மாற்றும். எட்டு மணி நேரம் வரை ஊறவைத்து எடுப்பது சிறந்தது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *