Share on Social Media


புதுடெல்லி: பூட்டானில் சீனாவின் சமீபத்திய நில அபகரிப்பு முயற்சிகளை புதிய செயற்கைக்கோள் படங்கள் அம்பலப்படுத்துகின்றன. ஒரே ஆண்டில் 4 புதிய கிராமங்களை சீனா கட்டமைத்துள்ளதாக சாட்டிலைட் புகைப்படங்கள் காட்டுகின்றன.

டோக்லாம் பீடபூமிக்கு அருகில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில் 2017 இல் இந்தியாவும் சீனாவும் (India – China) நேருக்கு நேர் மோதிக்கொண்ட இடத்தில் நான்கு கிராமங்கள் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.  

சீனா, இந்தியா, பூட்டான் இடையே இருக்கும் முச்சந்தியில் அமைந்துள்ள டோக்லாம் பீடபூமிக்கு அருகில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில் 100 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பல கிராமங்கள் கட்டப்பட்டு வருவதாக முன்னணி செயற்கைக்கோள் பட நிபுணர் ஒருவர் ட்வீட் செய்த புகைப்படங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கிராமங்கள் மே 2020 மற்றும் நவம்பர் 2021 க்கு இடையில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதே இடத்தில் தான் சில ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 
2017ம் ஆண்டில், டோக்லாம் பீடபூமியின் தெற்கே, பூட்டானின் எல்லைக்குள் சாலையை விரிவுபடுத்தும் முயற்சிகளை சீனா மேற்கொண்டபோது, இந்தியாவுடன் நேருக்கு நேர் மோதியது சீனா. 

அண்மையில் வெளியாகியிருக்கும் புகைப்படங்கள் (satellite images), சீனா, தனது அண்டை நாடுகளின் எல்லைகளில் ஊடுருவலை மேற்கொண்டு, நிலத்தை அபகரிக்க வலுவான ஆயுத தந்திரங்களைப் பயன்படுத்துகிறது என்பதை உறுதி செய்கிறது. இது, இந்த விவகாரம் தொடர்பாக, அமெரிக்கா உட்பட உலக நாடுகள் எழுப்பிய கவலைகளை உறுதி செய்கிறது.

READ ALSO | விண்வெளியில் போர் மூண்டால் சாமான்யரின் வாழ்க்கையும் ஸ்தபித்து விடும்

வரையறுக்கப்பட்ட ஆயுதப் படையை பராமரிக்கும் பூட்டானின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு இந்தியா பொறுப்பு என்பதால், சீனாவின் இந்த நடவடிக்கை இந்தியாவிற்கு ஆபத்தானது ஆகும். வரலாற்று ரீதியாக, இந்தியா, பூடானின் வெளியுறவுக் கொள்கையில் அந்நாட்டுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது என்பதும், அதன் ஆயுதப் படைகளுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பூட்டான், தனது நில எல்லைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்நாட்டுக்கு சீனா தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவருகிறது. சீனாவின் உயர்மட்டத் தலைமை அதிகாரபூர்வமாக எதுவும் சொல்லாவிட்டாலும், டோக்லாம் பீடபூமியைத் தவிர, கிழக்கு பூட்டானில் உள்ள சக்தேங் வனவிலங்கு சரணாலயத்தையும் சீனா தனது பிராந்தியத்தின் ஒரு பகுதியாக உரிமைக் கோருகிறது.  

கடந்த ஆண்டு ஜூலை மாதம், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், பூட்டானுக்கும் சீனாவுக்கும் இடையே நிலம் வரையறுக்கப்படாவிட்டால், இதுபோன்ற மேலும் பல சர்ச்சைகள் எழும் என்று சொன்னதும் குறிப்பிடத்தக்கது.

READ ALSO | கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற கொசு பற்றி தெரியுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *