Share on Social Media


இளம் வயதில் எதிர்பாலினர் மீது ஈர்ப்பு வருவது இயல்பு தான். இது இயற்கையாகவே நடைபெறும். ஆனால் உடல் ரீதியாக பிணைப்புக்கு நீங்கள் முற்பட்டால் நிதானித்து செயல்பட வேண்டும். இல்லையென்றால் இது உங்களுக்கு சமூக சிக்கல்களை உண்டாக்க வழி இருக்கிறது. மேலும் அதீத ஈர்ப்பு ஏற்படும் போது சிலருக்கு பாலியல் கட்டுப்பாடு என்பது இருப்பதில்லை. நிறைய தடவை பாலியல் ரீதியான எண்ணங்கள் மனதில் தோன்றுவதுண்டு. இந்த பிரச்சனையை நிறைய ஆண்கள் சந்திக்கிறார்கள். இவர்களுக்கு பெண்களை பார்த்தாலே மோகம் தலைக்கேறி விடும். இந்த சூழ்நிலையை ஆண்களை எப்படி கையாள வேண்டும் என்று உளவியல் நிபுணர் ஆலோசனை வழங்குகிறார்.

​கேள்வி

ஹாய், நான் ஒரு பாலியல் அடிமையாக இருப்பது தான் என் பெரிய பிரச்சினை. எனக்கு 10 வயதாக இருக்கும் போதிலிருந்தே இந்த மாதிரியான எண்ணம் தோன்றி வருகிறது. முதலில் நான் என் பணிப்பெண்ணை காதலித்தேன். இப்பொழுது எனக்கு வயது 23. இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் இருப்பினும் பெண்களின் மீதான ஈர்ப்பு அப்படியே இருக்கிறது. இன்றும் என்னை விட வயதான பெண்கள் மீது ஈர்ப்பு அதிகமாகிறது. என் பெண் நண்பர்கள் யாரிடமும் இந்த ஈர்ப்பு குறித்து நான் பேசவில்லை.

​கண்ணாபின்னா எண்ணம்

samayam tamil Tamil News Spot

சில நேரங்களில் நான் என் ஆடைகளை களைந்து அவளுடன் உடலுறவு வைத்துக் கொள்ள பலவந்தமாக முயல வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் அவள் என்ன நினைப்பாள் என்று என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்கிறேன். கடந்த 10 ஆண்களாக இப்படி பெண்களின் மீது ஏற்படும் ஈர்ப்பை கட்டுப்படுத்தி வருகிறேன். சுய இன்பம் கண்டு என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டுள்ளேன்.

​புதிய இடம்

samayam tamil Tamil News Spot

இப்பொழுது நான் என் வீட்டை விட்டு புதிய நகரத்திற்கு சென்று விட்டேன். இங்கு அதிகமாக பெண் நண்பர்கள் யாரும் இல்லை. இருப்பினும் என் பணிப்பெண் மற்றும் அண்டை வீட்டில் பெண்கள் இருக்கின்றனர். அவர்களை பார்க்கும் போதும் என்னால் என் உணர்வுகளை அகற்ற முடியவில்லை. நான் ஈர்க்கப்பட்ட பெண்ணிடம் இது குறித்து பேசலாமா? ஆனால் எந்தவொரு பெண்ணும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 10 ஆண்டுகளாக என் உடலின் தேவையை கட்டுக்குள் வைத்து வர முடியவில்லை. என் நிலைமை எனக்கு விரக்தியை தருகிறது. நான் இதற்கு என்ன செய்யலாம் சொல்லுங்கள்.

​உளவியல் நிபுணர் பதில்

samayam tamil Tamil News Spot

உங்க வயதில் எதிர்பாலினர் மீது தீவிர ஈர்ப்பு ஏற்படுவது இயல்பான ஒன்று. ஆனால் உடல் ரீதியான பிணைப்பு என்பதை இந்த சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையில், பொருத்தமான உரிமையுடன் செய்யப்பட வேண்டும். அதற்கு தான் ஒரு குறிப்பிட்ட வயதில் திருமணம் என்பதை செய்து வைக்கிறார்கள். உடலுறவு ரீதியாக ஒரு பெண்ணுடன் பழக கண்டிப்பாக அந்த பெண்ணின் ஒப்புதல் வேண்டும். வலுக்கட்டாயமாக செய்வது சமூகத்தில் உங்க பெயரை கெட வைத்து விடும். பெண்கள் இல்லை என்றால் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

​மனம்போன போக்கு

samayam tamil Tamil News Spot

உடல் ரீதியாக நெருங்கிப் பழகுவது என்பது ஒரு நபர் மற்றவர் மீது வைக்கக் கூடிய நம்பிக்கையின் மிக உயர்ந்த வடிவமாகும். எனவே எந்தவொரு ஆண் பெண்ணிடமும் நேரடியாக உடலுறவு கேட்பது பலரால் அவதூறாகவும் பொருத்தமற்றதாகவும் இருக்கும். இது உங்களை கடுமையான சிக்கலில் ஆழ்த்தும். எனவே தயவுசெய்து இந்த வழியில் செயல்படுவதை தவிருங்கள்.

​ஏற்ற துணை

samayam tamil Tamil News Spot

உங்களுக்கு ஏற்ற ஒரு துணையை கண்டறியுங்கள். அவரை பற்றி அறிந்து கொள்வது உணர்ச்சி பூர்வமான தொடர்பை ஏற்படுத்துதல், நம்பிக்கையை பகிர்ந்து கொள்வது, உறுதியளித்தல் போன்ற விஷயங்கள் உங்க இருவருக்கும் ஒருமித்த மற்றும் சுவாரஸ்யமான விஷயங்களுக்கு வழி வகுக்கும். இது தான் சிறந்த வழியாக இருக்கும். நீங்கள் ஒரு உறவில் இல்லையென்றால் உடலுறவு என்பது உங்களுக்கு ஒரு மன அழுத்தத்தையும் சமூக அழுத்தங்களையும் ஏற்படுத்தக் கூடும்.

பாலியல் எண்ணங்கள் கட்டாயமாக இருந்தாலோ உங்க அன்றாட வேலைகளில் அது இடையூறு செய்தாலோ நீங்கள் அருகிலுள்ள மனநல மருத்துவரை அணுகுங்கள். இன்சைட்-ஓரியண்டட் தெரபி அல்லது அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (சிபிடி) வடிவத்தில் சைக்கோட்ரோபிக் மருந்துகள் மற்றும் உளவியல் சிகிச்சையின் கலவையானது உங்கள் கவலைகளை கட்டுப்படுத்தவும் குறைக்கவும் நிச்சயமாக உதவும் என்று உளவியல் நிபுணர் கூறியுள்ளார்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.