Share on Social Media



நல்ல ஆரோக்கியத்துக்கு பாலியல் செயல்பாடு முக்கியமானது. இது சிறந்த மனநிலை மற்றும் தூக்கத்தை ஊக்குவிக்கிறது. கணவன் மனைவி உறவில் பாலியல் செயல்பாட்டில் உண்டாகும் பிரச்சனைகளும் தீர்வுகளும் குறித்து பார்க்கலாம்.

​விறைப்பு குறைபாடு

விறைப்புத்தன்மை பெற இரண்டு விஷயங்கள் நடக்க வேண்டும். ஆணுறுப்பு முழுமையடைவதற்கும், நிமிர்ந்து நிற்பதற்கும் போதுமான இரத்தம் பாய்ந்திருக்க வேண்டும். மேலும் இரத்தத்தை உள்ளே வைத்திருக்க தொடர்ச்சியான வால்வுகள் மூடப்பட வேண்டும்.

ஆணுறை : காண்டம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

ஆண்குறியை வழங்கும் சிறிய தமனிகள் சுருங்கும் போது விறைப்புத்தன்மை குறைபாடு உண்டாகலாம். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, அதிக கொழுப்பு அளவு அல்லது உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றால் தூண்டப்படும் இதய நோய் இதன் நேரத்தை 90% குறைக்கலாம்.

குறைந்த அளவு டெஸ்டோஸ்ட்ரான் ஹார்மோன்.

ஆன்டி டிரஸண்ட்ஸ் அல்லது வலி மாத்திரைகள் பக்கவிளைவுகள் காரணமாகலாம்.

என்ன செய்வது?

அடிப்படை நிலைமைகளுக்கு சிகிச்சையளிப்பது, பக்கவிளைவுகள் உண்டாக்கும் மருந்துகளை மாற்றுவது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, மூலம் சரி செய்யலாம். மருத்துவரின் ஆலோசனையுடன் ஆண்குறிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மருந்துகள் பயன்படுத்தலாம்.

​முன்கூட்டியே விந்து வெளியேறுதல்

samayam tamil Tamil News Spot

முன்கூட்டியே விந்து வெளியேறும் நிலை ஆனது விரும்பும் நிலையை விட விரைவில் உச்சமடையும் நிலை. இது பொதுவாக விறைப்புத்தன்மையுடன் தொடர்புடையது. ஆரம்ப நிலை விறைப்புத்தன்மை தொடங்கும் நபர்கள் அறியாமலே விரைவாக உச்சக்கட்டத்தை அடைவார்கள்.

என்ன செய்வது

இரண்டு விதமான சிகிச்சைகள் உண்டு. பென்சோகைன் அல்லது லிடோகைன் உணர்திறனை குறைக்க ஆண்குறிக்கு பயன்படுத்தப்படுகிறது. ஸ்பேர வடிவில் அல்லது வைப்ஸ் போன்று கிடைக்கும். மருத்துவர் ஆலோசனையுடன் இதை பயன்படுத்தலாம்.

தேர்ந்தெடுக்கபப்ட்ட செரோடோனின் மறுபயன்பாட்டு தடுப்பான்கள் அல்லது ஆண்டி டிரஸண்ட்கள் தேவைக்கேற்ப அல்லது தினசரி அடிப்படையில் பயன்படுத்தலாம். இது உச்சக்கட்டத்தை அடைவதை மிகவும் கடினமாக்குகிறது. உச்சியை அடைவதை கடினமாக்குகிறது.

​விழிப்புணர்வு, லிபிடோ அல்லது ஆர்கஸம் செயலிழப்பு

samayam tamil Tamil News Spot

சில வகையான பாலியல் செயலிழப்புகள் அனுபவிக்கலாம்.

குறைந்த லிபிடோ

உடலுறவு மீது ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஆண் குறி எழுவது கடினமாக இருக்கும். உச்சக்கட்டத்தை அடைவதில் சிரமம். முன்விளையாட்டு அல்லது உடலுறவின் போது உங்களால் உச்சக்கட்டத்தை அடையாமல் போகலாம் அல்லது தாமதமாகலாம்.

நாள்பட்ட மன அழுத்தம்

நாள்பட்ட பிரச்சனையால் உண்டாகும் மன அழுத்தமானது ஹார்மோன்களில் பிரச்சனை உண்டு செய்யும். இது மூளை வேதியியல், செறிவு மற்றும் உடல் செயல்பாடு ஆகியவற்றை பாதிக்கிறது. இது லிபிடொ மற்றும் விழிப்புணர்வை தூண்டும் ஹார்மோன் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாலுறவின் முதல் அவசியமான கட்டுமான பொருள் மூளையில் நிகழும் தூண்டுதல் ஆகும். குறைந்த ஹார்மோன்கள் வயதாகும் போது பாலியல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

பாலியல் வாழ்க்கையில் ஆண்களுக்கு டெஸ்டோஸ்ட்ரான் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அவசியம் ஆகும். இது வயதுக்கு ஏற்ப குறையக்கூடும். மாதவிடாய் நின்றவுடன் அதிகமாக குறையும். மெனோபாஸ் நேரத்தில் சூடான ஃப்ளாஷ் உங்களை தூங்கவிடாமல் செய்யலாம்.

எண்டோமெட்ரியோசிஸ் தொற்று, புற்றுநோய், நரம்பியல் நிலைமைகள், நீரிழிவு அல்லது தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்றவை தூக்கத்தை தடுக்கலாம். தூக்கத்தின் போது டெஸ்டோஸ்ட்ரான் தூக்கத்தின் போது உற்பத்தி செய்யப்படுகிறது என்பதால் தூக்கம் அவசியம்.

மனைவியை நெருங்கும் போதெல்லாம் அவர் உறவை தவிர்த்தால் காரணம் என்னவாக இருக்கும்? எப்படி சரி செய்வது?

வலி மாத்திரைகள் போன்ற சில மருந்துகள் உடலுறவில் ஆர்வம் மற்றும் உச்சகட்ட திறனை குறைக்கலாம்.

என்ன செய்வது

ஆண்மை அல்லது உச்சக்கட்ட செயலிழப்புக்கான சிகிச்சையானது அடிப்படை நிலைமைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் தொடங்குகிறது. பாலியல் உணர்வை ஊக்குவிக்க மருந்துகளை மேம்படுத்துவது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை வாழ்வது, ஹார்மோன் மாற்று சிகிச்சை உதவும்.

ஹார்மோன் அளவு குறைவாக இருந்தால் சமன் செய்வது.

குறைந்த பாலுணர்வு விருப்பம் கொண்டவர்களுக்கும், மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கும் மருத்துவர் சில மருந்துகளை பரிந்துரைக்கலாம்.

மூளை இரசாயனங்களை மேம்படுத்தும் செயல்பாட்டின் மூலம் பாலியல் உணர்வை அதிகரிக்கலாம். பாலியல் உணர்வு குறைந்தால் காரணத்தை கண்டறிந்து சிகிச்சை செய்தாலே அதை சரி செய்யலாம்.

​வலிமிகுந்த உடலுறவு

samayam tamil Tamil News Spot

மாதவிடாய் நிறுத்தத்தில் வரும் மாற்றங்கள் உடலுறவின் போது அதிக உராய்வை உண்டாக்கும் உயவு குறைபாடு போன்றவை காரணமாக இருக்கலாம்.

வலிமிகுந்த உடலுறவுக்கு காரணங்கள்

எண்டோமெட்ரியோசிஸ் (கருப்பைக்குள் திசுக்களின் அதிகப்படியான வளர்ச்சி) சிறுநீர்ப்பை தொற்று, ஈஸ்ட் தொற்றுகள், பாலியல் ரீதியாக பரவும் நோய், புற்றுநோய். வல்வோடினியா (யோனியின் திறப்பில் வலி அல்லது எரியும் ஒரு நிலை)

என்ன செய்வது

வலிக்கான காரணத்தை சுயமாக கண்டறிய முடியாது. ஏனெனில் சிறுநீர் தொற்றா அல்லது சிறுநீர்ப்பையில் கருப்பைக்கட்டி என பல காரணங்கள் இருக்கலாம். அல்லது சாதாரண தொற்றாகவும் இருக்கலாம். மருத்துவரை அணுகினால் மட்டுமே சரியான தீர்வு இருக்கும்.

குறைந்த ஈஸ்ட்ரோஜன் உயவு குறைபாடு காரணமாக இருந்தால், ஹார்மோன் மாற்றங்கள் உதவும். ஆனால் இது ஒவ்வொருவருக்கும் ஏற்றதாக இருக்கும். சிலருகு க்ரீம் மூலம் ஈஸ்ட்ரோஜன் கொடுக்கலாம். இது யோனியின் மட்டுமே வேலை செய்யும்.

யோனி லூப்ரிகண்டுகள், யோனி மாய்சுரைசர்கள், உடலுறவின் போது வலி மற்றும் உராய்வை குறைக்க உதவும்.

​பாலியல் செயலிழப்பு தவறல்ல

samayam tamil Tamil News Spot

பாலியல் செயலிழப்பு என்பது பொதுவானது. அது தவறு அல்ல. இது ஒருவரை மற்றும் குற்றம் சொல்ல வேண்டிய விஷயமும் அல்ல. இது தம்பதியரை பாதிக்கும் பொதுவான பிரச்சனை. இது இருவரையும் பாதிக்கும் பிரச்சனைகள் என்றாலும் இதை மேம்படுத்த சில காலம் ஆகலாம்.

மன அழுத்தம் இருந்தால் தாம்பத்திய வாழ்க்கையில் நாட்டம் இருக்காது, எப்படி சரி செய்வது?

மூன்று முதல் ஆறு மாதங்களில் நீங்கள் நன்றாக உடலுறவு கொள்வீர்கள் என்று உத்தரவாதம் சொல்ல முடியாது என்றாலும் அதை நோக்கி நீங்கள் முழுமையான பயணத்தை தொடங்கலாம்.

குடும்பத்தில் கணவன் மனைவி உறவு முக்கியமானது. தாம்பத்ய வாழ்க்கை பிரச்சனை இல்லாமல் இருந்தால் குடும்பத்தின் ஆரோக்கியமும், இருவருக்குமான அந்நியோன்யமும். அதிகரிக்கவே செய்யும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *