Share on Social Media


எள் விதைகள் என்பதை மருத்துவ மூலிகை செடி என்றே சொல்லலாம். எள்ளிள் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று நிறங்கள் உள்ளது.

எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்துமே மருத்துவ பயன்களை கொண்டவை. எள் வறண்ட பகுதியிலும் பயனளிக்க கூடியது. அதிக தண்ணீர் தேவையில்லை. எள் விதைகளிலிருந்து நல்லெண்ணெய் பெறுவதை அனைவரும் அறிவோம். இந்த எள்ளு செடியின் இலைகளும், எள்ளு பூக்களும் ஆரோக்கியத்துக்கு செய்யும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

​எள்ளின் நன்மைகள்

எள் விதைகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகிறோம். எள் விதைகளிலிருந்து எள் எண்ணெய் அதாவது நல்லெண்ணெய், எள்ளு பொடி, எள்ளு துவையல், எள்ளு உருண்டை என எல்லாமே உடலுக்கு ஆரோக்கியமும் வலுவும் தரக்கூடியவை.

பிரசவத்துக்கு பிறகு கருப்பையில் இருக்கும் அழுக்கு வெளியேற செய்ய வேண்டிய வைத்தியம் இதுதான்!

எள்ளு செடியில் இருந்து பெறும் எள் விதைகளை தாண்டி எள்ளு செடியின் இலைகள் மற்றும் பூக்களும் பயன்படுத்தப்படுகிறது. எள்ளு செடியின் இலை தும்பை இலையை போன்று கொஞ்சம் பெரியதாக இருக்கும்.

எள்ளு செடியின் பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த வெள்ளை நிற பூக்கள் நோய் தீர்க்கும் மருந்தாக பயன்பட்டு வருகிறது.குறிப்பாக கண் சம்பந்தமான வியாதிகளுக்கு அரிய மருந்தாகவே எள்ளு பூ செயல்படுகிறது. எதற்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

​கண் மந்தம் போக்க

samayam tamil Tamil News Spot

கண் எரிச்சல், கண்களில் மசமசப்பு போன்ற பிரச்சனை போக வாணலியில் சில எள்ளு பூக்களை போட்டு மிதமான தீயில் வதக்கி எடுக்கவும். இதை ஆறவைத்து மெல்லிய வெள்ளைத்துணியில் போட்டு இரண்டாக மடித்து கண்களில் கட்டி விட வேண்டும்.

இரவு நேரத்தில் இதை கட்டி வைத்திருந்து மறுநாள் வெள்ளை துணியை கழட்டி குளிர்ந்த நீரில் கண்களை வைத்து எடுக்கவும். பிறகு வெள்ளை துணியை வெற்றுநீரில் அலசி மீண்டும் மீண்டும் பயன்படுத்தவும். குணமாகும் வரை தொடர்ந்து இதை செய்ய வேண்டும். இது கண் எரிச்சலை போக்கி, பார்வை மந்தத்தை உண்டாக்கும்.

​கண் பார்வை மேம்பட

samayam tamil Tamil News Spot

கண்களில் பூ விழுதல், கேட்ராக்ட் பிரச்சனைகள் இருந்தால் அவை மேலும் தீவிரமாகாமல் இருக்க எள்ளுபூவை சரியான முறையில் பயன்படுத்தினால் பலன் கிடைக்கும்.

தாய்ப்பாலுடன் பேரீச்சம்பழக்கொட்டை சேர்த்து அரைத்து அதில் மான் கொம்பு சிறிது சேர்த்து உரைத்து எள்ளு பூக்களை கசக்கி இழைத்து கொள்ளவும். இதை கண்களுக்குள் மை போல் போட்டு வந்தால் பார்வைத்திறன் மேம்படும்.

​கண் கட்டி உடைய

samayam tamil Tamil News Spot

கண்களில் கட்டி உஷ்ணத்தால், கிருமிகளால் வரலாம். கண் கட்டி இருக்கும் போது கண்களில் பீளை என்று சொல்லகூடிய அழுக்குகள் அதிகமாக இருக்கும். இதனால் கண் வலி, கண்களிலிருந்து நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

கண் கட்டியை மறைக்க எள்ளுபூவுடன் எள்ளு இலையை சம அளவு கலந்து பசு நெய் விட்டு வதக்கி இறக்கவும். இதை வெள்ளைத்துணியில் முடிந்து கண்கட்டிகள் இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். தினமும் மூன்று வேளை ஒத்தடம் கொடுத்து வந்தால் இரண்டு மூன்று நாட்களில் கட்டிகள் மறையும்.

​கண் எரிச்சல் நீங்க

samayam tamil Tamil News Spot

கண்ணில் எரிச்சல் இருக்கும் போது எள்ளுப்பூவை கொண்டு அதை சரி செய்து விடலாம். எள்ளுப்பூவை கொண்டு வந்து மண் சட்டியில் போட்டு வதக்கி. இளஞ்சூடாக இருக்கும் போது சுத்தமான நீர் விட்டு கொதிக்க விடவும்.

அதை இறக்கி இரண்டு மணி நேரம் வைத்திருந்து இளஞ்சூடாக இருக்கும் போது அகலமான கிண்ணத்தில் இந்த நீரை விட்டு கண்களை திறந்தபடி அதில் வைத்து இமைகளை திறந்து திறந்து மூடினால் கண் எரிச்சல் குறையக்கூடும். மூன்று நாட்கள் தொடர்ந்து காலை, இரவு என இரண்டு வேளை இதை செய்து வந்தால் கண் எரிச்சல் நீங்கும்.

​கண் பார்வை தெளிவடைய

samayam tamil Tamil News Spot

எள்ளுப்பூ – 40 முதல் 50 வரை

மிளகு – 5

அரிசித்திப்பிலி – 10

சம்பங்கி பூவின் மொக்கு – 25

இவற்றை ஒவ்வொன்றாக தனித்தனியாக காய வைத்து சருகு போல் காயும் வரை வைக்கவும். பிறகு உரலில் போட்டு இடித்து சுத்தமான வெள்ளை துணியில் சலித்து எடுக்கவும்.

கீழே உட்கார்ந்து சாப்பிட்டா ஆயுள் அதிகரிக்குமாம், வேறு நன்மைகளும் தெரிஞ்சுக்கங்க!

காலை, மாலை என இந்த பொடியை சிட்டிகை அளவு எடுத்து கண்களில் போட்டுகொள்ள வேண்டும். இதை போட்ட உடன் கண்களில் எரிச்சலும், கண்களிலிருந்து நீர் வடிதலும் உண்டாகும். சிறிது நேரத்தில் எரிச்சல் தணியும் பிறகு குளிர்ந்த நீரில் கன்களை கழுவி வரவேண்டும். தொடர்ந்து ஒரு வாரம் வரை கண்களில் போட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *