Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • தெறி பட பாடலுக்கு லாலாவுடன் ஆடிய சாண்டி மாஸ்டர்
  • அப்பா மாதிரி டான்ஸ் ஆடும் சாண்டி மாஸ்டரின் மகள்
  • சாண்டி, லாலா டான்ஸ் வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் சாண்டி மாஸ்டர். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் தமிழ் திரையுலகில் பிசியாகிவிட்டார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் டான்ஸ் மாஸ்டராக வேலை செய்தார் சாண்டி.

சாண்டி மாஸ்டர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் அவர் தன் செல்ல மகள் லாலாவுடன் சேர்ந்து விஜய்யின் தெறி படத்தில் தளபதியும், நைனிகாவும் சேர்ந்து ஆடிய ஈனா மீனா டீகா பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கிறார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் சாண்டி.

அவர் வெளியிட்ட வீடியோவுக்குள் லைக்ஸுகள் வந்து குவிந்துள்ளது. லாலா குட்டி கடந்த 25ம் தேதி தான் தன் 3வது பிறந்தநாளை கொண்டாடினார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சாண்டியின் மனைவி டாரத்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக இருப்பதால் லாலாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சாண்டி வீட்டார் மட்டுமே கலந்து கொண்டார்கள்.
சாண்டி மகள் லாலா பிறந்தநாளுக்காக ஒரு வாரம் குவாரன்டைனில் இருந்த போட்டோகிராஃபர்சாண்டி வீட்டு மொட்டை மாடியில் தான் லாலாவின் பிறந்தநாள் பார்ட்டி நடந்தது. லாலாவை புகைப்படம் எடுப்பதற்காக போட்டோகிராஃபர் ஒரு வாரம் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாராம். மேலும் பார்ட்டியில் போட்டோகிராஃபர் மாஸ்க் அணிந்திருந்தாராம்.

டாரத்தியின் தங்கை சிந்தியாவால் அந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. இதையடுத்து தன் மூத்த மகளை மிஸ் பண்ணுவதாக டாரத்தி தெரிவித்தார்.

லாலாவுக்கு 3 வயது தான் ஆகிறது. ஆனால் அந்த குட்டி பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கி டாரத்தியும், சிந்தியாவும் நிர்வகித்து வருகிறார்கள். ஏற்கனவே லாலாவை ஏகப்பட்ட பேர் பின்தொடர்கிறார்கள்.

டாரத்தியும், சிந்தியாவும் தங்கள் செல்ல மகள் லாலாவின் புகைப்படங்கள், வீடியோக்களை தொடர்ந்து போஸ்ட் செய்து வருகிறார்கள்.





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *