Share on Social Media


கத்ரோன் கி கிலாடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது நடிகை சனா மக்புலுக்கும், நடிகர் ராகுல் வைத்யாவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. தற்போது அவர்களுக்கு இடையே பிரச்சனையாக உள்ளது.

இது குறித்து சனா பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

கத்ரோன் கி கிலாடி நிகழ்ச்சியின் முதல் எபிசோடு ஒளிபரப்பான நேரத்தில் ராகுல் வைத்யா என் நெருங்கிய நண்பராக இருந்தார். நான் ஒரு ஸ்டண்ட்டை சிறப்பாக செய்ததாக ட்விட்டரில் யாரோ கமெண்ட் செய்தாரக்ள்.

நான் நீச்சல் உடை புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன். ஆனால் இதுவரை ஒரு நெகட்டிவ் கமெண்ட் கூட வந்தது இல்லை. அப்படி இருக்கும்போது யாரோ ஒருவர் ராகுல் மற்றும் ஒருவர் பற்றி என் பக்கத்தில் கமெண்ட் செய்தார்.

ராகுல் வைத்யா மற்றும் ஒரு பார்ட்டி மோதிக் கொண்டிருக்கிறது. இதில் நான் சிக்கிக் கொண்டேன். ரசிகர் போடும் அனைத்து கமெண்ட்டுகளையும் நான் லைக் செய்வேன். அதன் மூலம் அவர்கள் சொல்வதை நான் கவனிக்கிறேன் என்பது அவர்களுக்கு புரியும். அப்படித் தான் அந்த ட்வீட்டையும் லைக் செய்தேன்.

ராகுலின் ரசிகர்கள் என்னை மோசமாக திட்ட ஆரம்பித்துவிட்டனர். ராகுல் நல்லவர் தான். ஏதோ நடக்கிறது என்பதை தெரிந்து கொண்ட ராகுல், எனக்கு மெசேஜ் அனுப்பினார். இதை எல்லாம் கண்டுகொள்ள வேண்டாம் என்றேன். இதையடுத்து 15 நாட்கள் கழித்து இன்ஸ்டாகிராமில் என்னை ஃபாலோ செய்வதை நிறுத்திவிட்டார்.

ஏன் இப்படி செய்தீர்கள், நம் நட்பை நாசமாக்கிவிட்டீர்கள் என்று ராகுலிடம் கூறினேன். அதற்கு அவரோ, நீங்கள் அந்த ட்வீட்டை லைக் செய்ததுடன், ரீட்வீட்டும் செய்தீர்கள் என்றார். அந்த ட்வீட் உங்களை பற்றியது இல்லை, அப்படி இருக்கும்போது உங்களுக்கு என்ன என்று கேட்டேன்.

இனி ராகுலிடம் பேசவே மாட்டேன். அவரின் செயல் ரொம்பவும் அல்பத்தனமாகவும், குழந்தைத்தனமாகவும் இருந்தது என்றார்.

ராகுல் வைத்யா பிக் பாஸ் 14 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் வீட்டில் பயங்கரம்: டிவி நடிகை குளித்தபோது பாத்ரூம் தாழ்ப்பாளை உடைத்த நடிகர்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *