Share on Social Media

தென்னிந்திய திரையுலகின் முக்கிய நடிகைகளில் ஒருவரானவர் சமந்தா (Samantha Akkineni). இவர் திருமணத்திற்கு பின்னரும் தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நாயகியாக தொடர்ந்து கொண்டிருக்கிறார். நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு நாகார்ஜுனன் மகனை திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிய போதிலும் அவருக்கு தொடர்ச்சியாக வெற்றி படங்கள் கிடைத்து வருகிறது. 

கடந்த 2010ஆம் ஆண்டு பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சமந்தா (Samantha Akkineni) அதன் பின் விஜய், சூர்யா, விக்ரம், என பல முன்னணி பிரபலங்களுடன் நடித்துள்ளார். மறுபுறம் இவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸின் இரண்டாம் பாகத்தில் நடித்த சமந்தாவுக்கு எக்கசக்க பாராட்டுக்கள் குவிந்தது. தற்போது அவர் விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

ALSO READ | Family Man 2-ல் அவர்களது வலியை உணர்ந்தேன், வேதனையால் நெகிழ்ந்தேன்: பதிவிட்ட சமந்தா, பாராட்டும் ரசிகர்கள்

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை சமந்தாவுக்கு 17.4 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர்.  இதனால் அவர் பதிவிடும் புகைப்படங்கள் விடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலூன் விளையாடும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அவருக்கு பார்ட்னராக அவர் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டி ஹாஸும் அவருடன் விளையாடுகிறது. இந்த வீடியோ பதிவு செய்து ஒரு மணி நேரத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

ALSO READ | See Pic’s: இணையத்தை கலக்கும் லேடி சூப்பர் ஸ்டாரின் லேடஸ்ட் புகைப்படம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *