இந்நிலையில் அண்மையில் இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர். இவர்களின் விவாகரத்து குறித்து நாகர்ஜுனா தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘கனத்த இதயத்துடன் இதை நான் பகிர்ந்து கொள்கிறேன். சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் இடையில் நடந்தது மிகவும் துரதிஷ்டமானது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் விஷயங்கள் தனிப்பட்டவை. அதில் எங்களால் தலையிட முடியாது.
இருப்பினும் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவருமே எனக்கு மிகவும் பிரியமானவர்கள். எங்கள் குடும்பம் எப்போதும் சமந்தாவை ஆதரிக்கும். அவர் எப்போதும் எங்களுடைய பிரியமானவராக இருப்பார், அவர் எங்களுடன் இருந்த ஒவ்வொரு நாளும் மறக்க முடியாதது. கடவுள் இருவருக்கும் மனவலிமையை கொடுக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்’. இவ்வாறு தன்னுடைய பதிவில் உருக்கமாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நாகர்ஜுனா, சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து குறித்து முதன்முறையாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘நடிகை சமந்தா மிக வேகமாக எங்கள் குடும்பத்துடன் இணைந்து விட்டார். எங்கள் எல்லாரையும் நன்றாக பார்த்துக் கொண்டார். அது மட்டுமல்ல சமந்தா அனைவருடனும் மிகவும் ஜாலியாக இருப்பார். எனக்கும் என் மனைவி அமலாவுக்கும் சமந்தா ஒரு மருமகளாக இல்லாமல் ஒரு மகள் மாதிரி இருந்தார். நாகசைதன்யா, சமந்தா பிரியும் நிலை ஒன்று வரும் என நாங்கள் கனவில்கூட கற்பனை செய்யவில்லை.
விவாகரத்து முடிவு எடுத்தது வேதனையாக இருக்கிறது. அவர்கள் இருவரிடையே கருத்து வேறுபாடு வராமல் இருந்திருக்கலாம். இருவரும் விட்டுக்கொடுத்து போய் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். சமந்தா இப்போது எங்களுடன் சேர்ந்து இல்லாவிட்டாலும்கூட நான் அவரை எனது மகளாகதான் பாவிக்கிறேன். அதுமட்டுமல்ல அவரும் அவரது சினிமா கேரியரும் இன்னும் மேலும் மேலும் வளர வேண்டும் என மனதார எதிர்பார்க்கிறேன். மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
‘அண்ணாத்தே’யில் சிவா சொல்லி அடித்துள்ளார் ; படம் மிகப்பெரிய வெற்றி – ரஜினிகாந்த் புகழாரம்!