Share on Social Media

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து முடிந்த 32ஆவது ஒலிம்பிக் போட்டியில் பளுதூக்குதல் போட்டியில் 49 கிலோ எடைப் பிரிவில் மணிப்பூரைச் சேர்ந்த வீராங்கனை மீராபாய் சானு  வெள்ளி வென்று அச்சத்தினார். இவரது வெற்றியை பிரதமர் உள்ளிட்டோர் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவே கொண்டாடியது.

பின்னர் நாடு திரும்பிய மீராபாய் சானு (Mirabai Chanu) அவர்கள் இரு தினங்களுக்கு முன்பு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இச்சந்திப்பிற்கு இதனை பற்றி தனது ட்விட்டர் பக்கத்திலும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.

ALSO READ | ஒலிம்பிக் வீராங்கனை மீராபாய் சானுவின் எளிமையால் நெகிழ்ந்த நடிகர் மாதவன்!!

இதனிடையில் நேற்று மீராபாய் சானு பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான்கானை (Salman Khan) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.  இதை சல்மான் கான் தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதில் “உங்களுக்காக மகிழ்ச்சியடைகிறேன்.மீராபாய் சானு உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி எப்போதும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்து நிச்சயம் உண்டு” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

சல்மான்கானின் இந்தப் பதிவினை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மீராபாய் சானு, “மிக்க நன்றி சார். நான் உங்களின் மிகப்பெரிய ரசிகை. என் கனவு நனவானது போல இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

ALSO READ | Tokyo Olympics: மீராபாய் சானுவின் வெள்ளி பதக்கம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *