united nations covid 19 response m6OZNfmo2Dk unsplash Tamil News Spot
Share on Social Media

இப்படி கோவிட்-19 பரிசோதனை பற்றிய பல்வேறு கருத்துகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. உண்மையில் கோவிட்-19 பாதிப்பை அறிய எந்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும் எனத் தொற்றுநோய் மருத்துவர் என்.சுதர்சனிடம் கேட்டோம்:

“கோவிட்-19-க்கு ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனைதான் `கோல்டு ஸ்டாண்டர்டு’ (Gold Standard) என்று வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால். ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனையின் உணர்திறன் (Sensitivity) என்பது 70 சதவிகிதம்தான் இருக்கும். அதன் காரணமாக, ஃபால்ஸ் பாசிட்டிவ், ஃபால்ஸ் நெகட்டிவ் எல்லாம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.

பொதுவாக நோய்த்தொற்று ஏற்படும் ஆரம்ப நாள்களில் ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனைதான் சிறந்தது. தொற்று ஏற்பட்டு ஐந்து நாள்கள் கடந்துவிட்டன என்றால் ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனையுடன் சி.டி ஸ்கேன் பரிசோதனையும் நல்லது. நுரையீரலில் இருக்கும் கோவிட்-19 தொற்றை சி.டி ஸ்கேன் 100 சதவிகிதம் சரியாகக் காட்டிவிடும். சி.டி ஸ்கேன் எனும்போது அரை மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும். ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனை முடிவு வருவதற்கு ஒருநாள் ஆகிவிடும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *