Share on Social Media


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அவினாசிகண்டிகையில் நள்ளிரவில் மர்மநபர்கள் 3 பெண்கள் உட்பட நால்வரை துப்பாக்கியால் சுட்டு நகை பணம் கொள்ளை. படுகாயமடைந்தவர்கள் அரக்கோணம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதி. நகர காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்கள்.

அரக்கோணம் அடுத்த அவினாசிகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் ஆடிட்டர் புஷ்கரன் (25). இவர் கிராமத்திற்கு வெளியில் தங்களுக்கு சொந்தமான வயலின் நடுவில் தனியாக வீடுகட்டி வசித்து தனது தாய் சுதா (52) பெரியம்மா லதா (57) பாட்டி ரஞ்சிதம்மாள் (76) ஆகியோருடன் வசித்து வருகின்றார்.

ALSO READ | திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு அதிரவைக்கும் திருப்பங்கள்…

நள்ளிரவில் வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டு திறந்தபோது முகமுடி அணிந்த 3 மர்மநபர்கள் நாட்டு துப்பாக்கியால் ஜன்னல் வழியாக சுட்டு உள்ளே நுழைந்தாக கூறப்படுகிறது.

பின்னர் பெண்கள் அணிந்திருந்த மற்றும் வீட்டிலிருந்த 25 சவரன் தங்க நகைகள் பணம் ரூ.60 ஆயிரத்தை கொள்ளையடித்து கொண்டு வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி சென்றதாக தெரிகிறது.

இதனையடுத்துநாட்டு துப்பாக்கியால் சுட்டதில் குண்டு ரவை சிதறி படுகாயமடைந்த புஷ்கரன், சுதா, லதா மற்றும் ரஞ்சிதம்மாள் உட்பட நால்வரும் உடனடியாக சிகிச்சைக்கு அரக்கோணம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அரக்கோணம் நகர காவல்துறையினர் விசாரனை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்கள். கொள்ளையர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகள் பேசியதாக கூறப்படுகிறது. இவர்கள் வட இந்திய கொள்ளையர்களா என்கிற கோணத்தில் விசாரனை நடத்தி வருகின்றனர்கள்.

ALSO READ | பிரபல நகைக்கடையில் துளையிட்டு கொள்ளை; வடநாட்டு கொள்ளையர்களின் கைவரிசையா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *