Share on Social Media


பின்னணிப் பாடகராக மட்டுமல்ல, மக்களின் மனதை வருடிச் செல்லும் குரலுக்கு சொந்தக்காரர் மெளனித்து பூமியில் அடங்கிய நாள் இன்று.

பாடும் நிலா எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைந்து திரையுலகம் அமாவாசையான நாள் இன்று.

கொரோனா என்ற ரூபத்தில் கொடுங்காலன், பாடலரசனை வாரிச் சென்ற இந்த தினத்தில் பாலசுப்ரமணியம் என்ற எஸ்.பி.பிக்கு சமூக ஊடங்களில் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மண்ணில் உந்தன் பாடலின்றி யாரும் வாழக்கூடுமோ என்று அனைவரையும் முகாரி பாடச் செய்துவிட்டு காற்றோடு கலந்த எஸ்.பிபியின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று. 

1979 இல் வெளிவந்த சங்கராபரணம் திரைப்படத்தில் பாடிய பாடலில் அவரின் குரலில் சொக்கிப் போன ரசிகர்கள் இன்றும் அவரது மாயக் குரலின் தாக்கத்தில் இருந்து வெளிவர முடியவில்லை.

காதல், கம்பீரம், ஆசை, ஆக்ரோஷம், பரிவு, பச்சாதாபம், அன்பு, பண்பு, கோவம், தாபம் என பல்வேறு உணர்வுகளை தனது இனிய குரலில் பாடிய இசைக்குயில் இன்று நம்முடன் இல்லை. ஆனால் அவரது பாடல்கள் என்றும் அமரத்துவம் வாய்ந்தவை என்பது சத்தியமான உண்மை.

Also Read | நீங்காத ரீங்காரம் நீதானே, இதயத்தில் இசையாலே இணைந்தாயே!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *