Share on Social Media

சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அணி வீர்ரகள், பயிற்சியாளர் என அனைவர் மீதும் பலவித கேள்விகள் எழும்பி வருகின்றன. பல முன்னாள் வீர்ரகளும், விளையாட்டு ஆர்வலக்ரளும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், “ரவி சாஸ்திரி (Ravi Shastri https://zeenews.india.com/tamil/social/wtc-team-india-coach-ravi-shastri…)தொடர்ந்து நல்ல முறையில் பயிற்சி அளித்து, அணி போட்டிகளை வென்று கொண்டிருந்தால், அவரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கான தேவை இல்லை” என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார். அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள டி 20 உலகக் கோப்பை முடிந்ததும் 59 வயதான ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. முன்னாள் இந்திய ஆல்ரவுண்டரான ரவி சாஸ்திரி இந்த பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்கும் மனநிலையில் உள்ளாரா என்பது தெளிவாகவில்லை. மேலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தற்போதைய தேசிய கிரிக்கெட் அகாடமி (NCA) தலைவர் ராகுல் டிராவிட்டை (Rahul Dravid https://zeenews.india.com/tamil/social/meet-the-venkaboys-rahul-dravids-…), இலங்கையில் நடக்கவுள்ள லிமிட்டெட் ஓவர் தொடரின் பயிற்சியாளராக்கக்கூடும் என்று ஊகங்கள் உள்ளன. ஆனால் தற்போது இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வரவில்லை.

“இதைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். இந்த இலங்கைத் தொடர் முடிவடையட்டும். நமது அணி வெளிப்படுத்தும் செயல்திறனை நாம் அதற்குப் பிறகு அறிந்து கொள்வோம்,” என்று கபில் தேவ் கூறியதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. 

 

ALSO READ: MS Dhoni: 2020-யிலேயே ஓய்வு பெற்றுவிட்டாலும், இந்த பட்டியலில் இன்னும் தலதான் முதலிடம் https://zeenews.india.com/tamil/sports/ms-dhoni-is-still-number-one-in-t…

“நீங்கள் ஒரு புதிய பயிற்சியாளரை கொண்டு வர முயற்சிப்பதில் தவறில்லை. எனினும், ரவி சாஸ்திரி தொடர்ந்து அவரது பணியை நன்றாக செய்து வந்தால், அவரை அகற்றவும் எந்த காரணமும் இல்லை. இதற்கு காலம் தான் பதில் சொல்லும். அதற்கு முன், இது பற்றி அதிகம் பேசுவது, பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்கள் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன்” என்று கபில் தேவ் தனது முன்னாள் துணை கேப்டனைப் பற்றி கூறினார்.

ரவி சாஸ்திரியின் பயிற்சியின் கீழ், ஆஸ்திரேலியாவில் இரண்டு முறை இந்திய அணி டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. அவரது பயிற்சியின் கீழ், இந்தியா 2019 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டிக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின்  இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது. எனினும், இரண்டு நாக் அவுட் ஆட்டங்களிலும் நியூசிலாந்திடம் தோற்றது.

இரு வேறு நாடுகளில் இரு இந்திய அணிகள் விளையாட உள்ளன. விராட் கோலி தலைமையிலான அணி இங்கிலாந்தில், ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. ஷிகர் தவன் தலைமையிலான அணி ஒரு குறிப்பிட்ட ஓவர் தொடரில் இலங்கையை எதிர்கொள்ள உள்ளது.

“இந்திய அணி வீர்ரகளின் இருப்பு (பெஞ்ச் ஸ்ட்ரெங்ந்த்) பலமாக உள்ளது. வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்து, இங்கிலாந்து மற்றும் இலங்கை இரண்டு நாடுகளிலும் வெற்றி பெறக்கூடிய இரு அணிகளை நாம் உருவாக்க முடிந்தால், அது ஒரு மிக நல்ல விஷயம்” என்று 1983 உலகக் கோப்பை வென்ற கேப்டன் கபில் தேவ் கூறினார். 

பல திறமையான இளைய வீரர்களுக்கு இலங்கைத் தொடருக்கான வாய்ப்பு கிடைத்திருப்பதில் கபில் தேவ் (Kapil Dev https://zeenews.india.com/tamil/sports/virat-kohli-gets-this-interesting…) மகிழ்ச்சியடைந்தார். “இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், அதில் தவறில்லை. ஆனால் ஒரே நேரத்தில் இரு அணிகள் மீதும் இத்தகைய அழுத்தத்தை போட வேண்டுமா என்பதை அணி நிர்வாகமே தீர்மானிக்க வேண்டும்” என்று கபில் சுட்டிக்காட்டினார்.

ALSO READ: முதல் பந்தில் விக்கெட் சேட்டை செய்த அதிரடி வீரர் கிறிஸ் கெயில் – வீடியோ வைரல் https://zeenews.india.com/tamil/sports/chris-gayle-who-made-a-wicket-on-…

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *