Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • இன்று தியேட்டர்களில் ரிலீஸான புஷ்பா
  • ரஷ்மிகாவுக்கு செல்லப் பெயர் வைத்த அல்லு அர்ஜுன்

கன்னட திரையுலகில் தன் கெரியரை துவங்கிய ரஷ்மிகா மந்தனா, தெலுங்கு திரையுலகப் பக்கம் சென்று அங்கு முன்னணி நடிகையாகிவிட்டார்.

கார்த்தியின் சுல்தான் மூலம் கோலிவுட்டுக்கும் வந்த ரஷ்மிகா, தற்போது பாலிவுட் படங்களில் பிசியாகிவிட்டார். அவரை ரசிகர்கள் நேஷனல் க்ரஷ் என்கிறார்கள்.

இந்நிலையில் அவர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்திருக்கும் புஷ்பா படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது. படத்தை பார்த்தவர்கள் ஆஹா, ஓஹோ என்று பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அல்லு அர்ஜுன் நடிப்பை ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். முன்னதாக நடந்த புஷ்பா விளம்பர நிகழ்ச்சியில் ரஷ்மிகா பற்றி அல்லு அர்ஜுன் கூறியதாவது,

தேசிய அளவிலான க்ரஷாக ஆகிவிட்டார் ரஷ்மிகா. அதனால் தான் நான் ரஷ்மிகாவை க்ரஷ்மிகா என்று செல்லமாக அழைக்கிறேன் என்றார்.

இதற்கிடையே புஷ்பா பற்றி ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,

புஷ்பா படம் மரண மாஸாக இருக்கிறது. அல்லு அர்ஜுனின் நடிப்பு வேற லெவல். அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் ஒரு பிளாக்பஸ்டர்.

படம் வெறித்தனம். சண்டை காட்சிகள், காமெடி எல்லாம் வேற லெவலில் இருக்கிறது. சுகுமாருக்கு ஹாட்ஸ் ஆஃப் என தெரிவித்துள்ளனர்.
நடிகைக்கு ரூ. 3 கோடி கார், ரூ. 2.7 கோடி வைர நெக்லஸை திருமண பரிசாக கொடுத்த மாஜி காதலர்கள்?



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *