Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • ரன்பிர் கபூரிடம் திருமணத்தை தள்ளிப் போடச் சொன்ன இயக்குநர்
  • நடிகை ஆலியா பட்டை காதலிக்கும் ரன்பிர் கபூர்

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்பிர் கபூருக்கு 38 வயதாகிறது. அவர் வாழ்வில் காதல் வருவதும் போவதுமாக இருக்கிறது. நடிகைகள் தீபிகா படுகோன், கத்ரீனா கைஃப் ஆகியோர் ஒரு காலத்தில் ரன்பிர் கபூரை காதலித்தனர்.

ரன்பிர் கபூர் தற்போது பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டை காதலித்து வருகிறார். தன் நண்பன் அயன் முகர்ஜியின் பிரமாஸ்திரா படத்தில் சேர்ந்து நடித்தபோது ரன்பிர் கபூருக்கும், ஆலியா பட்டுக்கும் இடையே காதல் ஏற்பட்டு, அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

லாக்டவுன் நேரத்தில் ஆலியா, ரன்பிர் கபூர் வீட்டில் தங்கியிருந்தார். மேலும் தன் காதலர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பிலேயே வீடும் வாங்கியிருக்கிறார் ஆலியா. அவர்களின் திருமணம் எப்பொழுது என்று தான் பலரும் கேட்கிறார்கள்.

ரன்பிர் வீட்டில் ஆலியா பட்டை ஏற்றுக் கொண்டுவிட்டனர். ரன்பிர் கபூர், அம்மா நீத்து கபூர் செல்லம். இந்நிலையில் நீத்து கபூரும், ஆலியா பட்டும் நெருக்கமாகிவிட்டனர். அதனால் ரன்பிரின் இந்த காதல் நிச்சயம் திருமணத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தனை வயதாகியும் ரன்பிர் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று பலரும் கேட்கிறார்கள். இது குறித்து ரன்பிர் ஒரு முறை கூறியதாவது,

திருமணம் செய்து கொண்டு செட்டிலாக விரும்பிய நேரத்தில், நான் அயன் முகர்ஜியை சந்தித்தேன். நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இருந்தேன். நான் 20களிலேயே திருமணம் செய்து கொண்டு, அப்பாவாக விரும்பினேன்.

அதற்கு அயன் முகர்ஜியோ, ரிலாக்ஸ். உங்களின் கெரியர் இப்போது தான் துவங்கியிருக்கிறது. மக்களை சந்தியுங்கள், வாழ்க்கையை வாழுங்கள், அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். அயன் கூறியபிறகே நான் திருமணத்தை தள்ளிப் போட்டேன் என்றார்.
சுய இன்ப காட்சியில் நடித்தது எப்படி?: சூப்பர் ஹிட் பட நடிகை விளக்கம்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *