Share on Social Media


சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நேற்றைய தினம் தனது 71 ஆவது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடினார். அத்துடன் அவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். எப்போதும்போல ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ஏற்பாடுகளை செய்து கோலாகலமாக கொண்டாடினர்.

இந்த தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு :- 

ALSO READ | Happy Birthday Super Star Rajinikanth: ‘ரஜினி’ என்பது பெயரல்ல ஒரு புரட்சி!!

 

 

என் பிறந்தநாளன்று என்னை அன்புடன் வாழ்த்திய மத்திய அமைச்சர் திரு.அமித்ஷா அவர்களுக்கும், திரு. ராஜ்நாத் சிங், திரு. நிதின் கட்கரி, பாராளுமன்ற சபாநாயகர் திரு. ஓம் பிர்லா, பல மாநில ஆளுநர்களுக்கும், திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும். திரு. ஓ. பன்னீர்செல்வம், திரு. ஜி.கே வாசன், திருநாவுக்கரசர், திரு.அரங்கராஜன், திரு. பொன் ராதாகிருஷ்ணன், திரு.அண்ணாமலை, திரு.அன்புமணி ராமதாஸ், திரு.திருமாவளவன், திரு.சீமான், டிடிவி.தினகரன், திருமதி. சசிகலா அவர்களுக்கும் மற்றும் பல மத்திய மாநில அரசியல் நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. கமலஹாசன், திரு.இளையராஜா, திரு.பாரதிராஜா, திரு. வைரமுத்து, திரு. அமிதாப்பச்சன், திரு. ஷாருக்கான், திரு.சச்சின் டெண்டுல்கர் திரு.ஹர்பஜன்சிங், திரு. வெங்கடேஷ் மற்றும் பல பிரபலங்களுக்கும் திரையுலகை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும் ஊடக பத்திரிகை நண்பர்களுக்கும் என் நலனுக்காக கோயில்களில் பூஜைகளும் ஹோமங்களும் அன்னதானம் நடத்தி பிரார்த்தனை செய்த என்னை வாழ வைக்கும் தெய்வங்களான என் ரசிக பெருமக்களுக்கும் தமிழக மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ | 26 வருடங்களுக்கு பிறகு தீபாவளி தினத்தில் வெளியாகும் ரஜினி படம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *