Share on Social Media


நடிகர் ரஜினிகாந்த் அதிக மக்களால் விரும்பப்படும் ஒரு நடிகர்.  இவரது படங்களின் முதல் நாள்  காட்சியை  பார்க்க ரசிகர்கள் பலரும் முட்டி மோதி கொண்டிருப்பார்கள்.  சமீபத்தில் வெளியான அண்ணாத்தே படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி தற்போது அடுத்த படத்திற்கான கதையை தேடி வருகிறார்.  மேலும் நெல்சனுடன் இவர் புதிய படமொன்றில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ALSO READ | மிகுந்த உற்சாகத்தில் ஹிப் ஹாப் தமிழா! இதுதான் காரணமா?

இந்நிலையில் இவர் சமீபத்தில் வெளியான ’83’ படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்துள்ளார்.  கபீர் கான் இயக்கத்தில் ஹிந்தியில் வெளியான படம் ’83’.  இப்படத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஜீவா, பங்கஜ் திரிபாதி, தாஹிர் ராஜ் பாசின், சாகிப் சலீம், ஜதின் சர்னா, சிராக் பாட்டீல், டிங்கர், ஷர்மா, நிஷாந்த் தஹியா, ஹார்டி சந்து, சாஹில் கட்டார், அம்மி விர்க், ஆதிநாத் ஆகியோர் நடித்துள்ளனர்.  1983 உலகக் கோப்பையில் கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியின் பயணத்தை மையமாக கொண்டு இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த், “வாவ்! என்ன ஒரு அற்புதமான, பிரம்மாண்டமான படம்.  படத்தின் தயாரிப்பாளர்களுக்கும், கபீர்கான், கபில்தேவ், ரன்வீர் சிங்க், ஜீவா ஆகியோருக்கும், படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.  இந்த படத்திற்கு பல தரப்பிலிருந்தும் ஏராளமான பாராட்டுகளும், நேர்மறையான விமர்சனங்களும் குவிந்து வரும் நிலையில் நடிகர் ரஜினியின் பாராட்டு இப்படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்து இருக்கிறது.

 

இவர் ஏற்கனவே சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம், சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு, ராக்கி போன்ற படங்களை பார்த்துவிட்டு பாராட்டுக்களை தெரிவித்தவர் தற்போது இந்த படத்திற்கும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | டிசம்பர்-31 அன்று வெளியாகும் 14 படங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *