Share on Social Media


கொரோனா வைரஸ் பிரச்சனையால் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த 14ம் தேதி துவங்கியது. ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஃபிலிம்சிட்டியில் பிரமாண்ட செட் போட்டு படப்பிடிப்பை நடத்தினார்கள்.

கொரோனா பிரச்சனை இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்பட்டனர். படப்பிடிப்பு தளத்தில் இருந்து யாரும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அதே போன்று வெளியாட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அப்படி இருந்தும் படக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட ரஜினிக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஞாயிற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கட்சியே வேணாம்னு ரஜினி சொல்லும் அளவுக்கு ஹைதராபாத்தில் நடந்தது என்ன?

டிஸ்சார்ஜ் ஆனவுடன் ரஜினி சென்னை திரும்பினார். அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து கட்சி துவங்கவில்லை என்று அறிவித்தார் ரஜினி. கொரோனா பிரச்சனை தற்போதைக்கு தீர்வதாக இல்லை. மேலும் கொரோனா புது உருவத்தில் வேறு வந்து மிரட்டுகிறது. அப்படி என்றால் அண்ணாத்த படப்பிடிப்பு என்னவாகும் என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

இந்நிலையில் பிப்ரவரி மாதம் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம் ரஜினி. அவர் ஹைதராபாத் வரை பயணம் செய்ய முடியாது என்பதால் சென்னையிலேயே செட் போடுகிறார்களாம். சென்னையில் படப்பிடிப்பை நடத்தினால் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் ஏற்படாதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அண்ணாத்த படத்தில் ரஜினி தொடர்பான காட்சிகள் தான் படமாக்கப்பட வேண்டியுள்ளது. அதனால் அவர் இல்லாமல் படப்பிடிப்பை நடத்த முடியாது. முன்னதாக அண்ணாத்த படத்திற்காக சென்னையில் தான் செட் போட்டார்கள். அதன் பிறகே ஹைதரபாத்தில் செட் போட்டு படப்பிடிப்பை நடத்தினார்கள்.

அண்ணாத்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *