Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ரஜினி
  • பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து ஹூட் ஆப்பில் பேசிய ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தன் 71வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என்று ஏராளமானோர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் தன்னை வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருப்பதுடன் ஹூட் ஆப்பிலும் பேசியிருக்கிறார்.
மேலும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் ஹூட் ஆப் மூலம் நன்றி தெரிவித்திருக்கிறார். அவர் அந்த ஆப்பில் கூறியிருப்பதாவது,
என்னுடைய பிறந்த நாளன்று என்னை நெஞ்சார வாழ்த்திய மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய என் அருமை நண்பர் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இது தவிர்த்து தனக்கு வாழ்த்து தெரிவித்த பிற அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வீட்டில் தன் குடும்பத்தாருடன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார் ரஜினி. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.
மகள்கள், பேரன்கள், சின்ன மருமகனுடன் பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *