Share on Social Media

இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட திட்டமிடப்பட்ட இந்தப் படத்தின் ரிலீஸ், கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போடப்பட்டது.

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாவதற்கு முன்னதாகவே ஏறக்குறைய படபிடிப்பு முடிந்துவிட்டநிலையில், இன்று ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையான நவம்பர் மாதம் நான்காம் தேதி அண்ணாத்த ரவுண்ட் வருவார். கொரோனா ஊரடங்கு சமயத்தில் இறுதிக்கட்டப் பணிகளை படக்குழு மேற்கொண்டது. டப்பிங் பணிகளும் கிட்டத்தட்ட முடித்துவிட்டது படக்குழு. 

ஏற்கனவே தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், கோவிட் பரவல் அதிகமாக இருந்ததால், தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்தது. தற்போது தீபாவளியன்று  ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளியாகும் என்பதை படக்குழுவினர் உறுதி செய்துவிட்டனர்.

ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளியன்று வெளியாகும் என அறிவித்த தயாரிப்பு நிறுவனம், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளது.

ALSO READ | ரஜினிகாந்தின் ‘அண்ணாத்தே” படபிடிப்பு விரைவில் சென்னையில்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *