Share on Social Media


தமிழில் வெளிவரும் சில படங்கள் அதிகார்வபூர்வாக ரீமேக் செய்யப்படுகிறது.  பல படங்கள் சொல்லாமலும் ரீமேக் ஆகிறது.  அந்த வகையில் கமல் ஹாசன் பெண் வேடத்தில் நடித்து வெற்றிநடைபோட்ட அவ்வை சண்முகி மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து படம் போன்றவை மற்ற மொழி படத்தில் இருந்து இன்ஸ்பியர் அல்லது தழுவலாக எடுக்கப்பட்டதாக கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.  சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளார்.  அதில் ரசிகர் ஒருவர் கமல்ஹாசன் குறித்து கேள்வி எழுப்பினார்.  அப்போது பேசியவர் ரவிக்குமார் ரஜினி மற்றும் கமலை வைத்து இயக்கிய படங்கள் குறித்தும், அவர்களுடன் ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் நகைச்சுவைகள் குறித்தும் பகிர்ந்துள்ளார்.

ALSO READ இது வேற லெவல் அப்டேட்! எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மேலும் கமல்ஹாஸன் நடிப்பில் வெளியான இந்தியன் படம் தான் அவ்வை சண்முகி படத்தின் தொடக்கம் என்றும் கூறியுள்ளார்.  ரஜினி மற்றும் கமலை வைத்து இயக்கிய சில படங்கள் ஆங்கில படத்தின் தழுவல் என்பதையும் வெளிப்படையாக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.  1996-ம் ஆண்டு வெளியான அவ்வை சண்முகி படம், ராபின் வில்லியம்ஸ் நடித்த “Mrs.DOUBTFIRE” என்னும் ஆங்கிலப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.  அந்த படத்தின் கதையை மட்டும் மையமாக வைத்து கொண்டு நாங்கள் மற்ற கதாபாத்திரங்களை உருவாக்கினோம்.  இது கமலின் ஐடியா என்றும் கூறியுள்ளார்.   

மேலும், 1995-ம் ஆண்டு வெளிந்த ரஜினி நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்த முத்து திரைப்படம் 1994-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “தேன்மாவின் கொம்பது” என்ற படத்தின் தழுவலில் எடுக்கப்பட்டது.  இந்த திரைப்படம் ஹிந்தியிலும், தெலுங்கிலும், ஜப்பானிய மொழியிலும் வெளியானது.  2002-ம் ஆண்டு வெளிவந்த பஞ்சதந்திரம் ஒரு ஆங்கில படத்தின் தழுவலாகும்.  ஆனால் அதை அப்படியே காபி செய்யாமல் நகைச்சுவையை மையமாக வைத்து  இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

mohlal

ALSO READ விரைவில் புதிய படத்தில் இணையும் விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *